லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாளில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்

Update: 2021-10-02 06:07 GMT

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாளில் அவருக்கு தமது மரியாதையை செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். நற்பண்புகள் மற்றும் கொள்கை அடிப்படையிலான அவரது வாழ்க்கை, நாட்டு மக்களுக்கு எப்போதும் ஊக்கமளிக்கும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News