மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

Supreme Court News Today - காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-07-20 07:31 GMT

Supreme Court News Today - காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி, உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையும் நிரம்பியநிலையில் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் 22ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதிக்க கூடாது என தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடும் எதிர்ப்பு பதிவு செய்து வந்த நிலையில் 3 முறை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக்கூடாது என தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடத்த தடை இல்லை. மேகதாது குறித்த விரிவான திட்ட அறிக்கை குறித்து ஆய்வு செய்து விவாதிக்கலாம், ஆனால் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக எந்த முடிவும் ஆணையம் எடுக்க கூடாது. மேகதாது குறித்து விவாதிக்கலாமா என்பது குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தை அறிய விரும்புகிறோம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என்றும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News