உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி யு.யு.லலித்

Justice Uday Umesh Lalit - இந்தியாவின் 49வது தலைமை நீதிபதியாக நீதிபதி உதய் உமேஷ் லலித் இன்று பதவியேற்றுக்கொண்டார்,

Update: 2022-08-27 07:35 GMT

Justice Uday Umesh Lalit - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி என்வி ரமணா பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு நாள் கழித்து. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று காலை ராஷ்டிரபதி பவனில், நீதிபதி லலித்துக்கு, தலைமை நீதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நீதிபதி ரமணா, மரபு மற்றும் சீனியாரிட்டி விதிமுறைகளுக்கு ஏற்ப, நீதிபதி லலித்தை தனது வாரிசாக பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து, நீதிபதி லலித் இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதை குடியரசுத் தலைவர் உறுதி செய்தார்.

நீதிபதி லலித், இந்திய நீதித்துறையின் தலைவராக 74 நாட்கள் குறுகிய பதவியில் இருப்பார். நவம்பர் 8 அன்று ஓய்வு பெறுவார்.

நீதிபதி லலித், உச்ச நீதிமன்ற நீதிபதியாவதற்கு முன், புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞராக இருந்தார். அவர் ஆகஸ்ட் 13, 2014 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News