இந்திய கடற்படைக்கு புதிய கொடி எதைக் குறிப்பிடுகிறது?

Indian Navy Flag -புதிய கடற்படைக் கொடியை வெளியிட்டிருப்பதன் முக்கியத்துவம் தைக் குறிப்பிடுகிறது என்பது குறித்து கீழே காண்போம்.

Update: 2022-09-02 06:01 GMT

Indian Navy Flag -பிரதமர் மோடி, இன்று கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணித்த நிலையில், இந்திய கடற்படைக்கான புதிய கடற்படைக் கொடியை வெளியிட்டார்.

நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தின் அறிமுக விழாவில் இந்திய கடற்படை இன்று புதிய கொடிக்கு மாறியது. வடிவமைப்பு கூறுகளில் ஒன்று மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் கடற்படையைக் நினைவு கூர்ந்தது.

புதிய கொடியில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என பார்ப்போம்

  • புதிய கொடியில் மேல் புறத்தில் தேசியக் கொடி உள்ளது. தேசிய சின்னத்துடன் கூடிய நீல எண்கோண வடிவம் ஒரு நங்கூரத்தின் மேல் அமர்ந்து, கடற்படையின் வாசகத்துடன் கூடிய கவசத்தின் மீது பொருத்தப்பட்டுள்ளது.
  • இரட்டை கோல்டன் பார்டர்கள் கொண்ட எண்கோண வடிவம், பேரரசர் சத்ரபதி சிவாஜியின் தொலைநோக்கு கடல்சார் கண்ணோட்டத்தில் கடற்படையை நிறுவியதை குறிப்பிடுகிறது.

சத்ரபதி சிவாஜி மகாராஜின் கடற்படை 60 போர்க் கப்பல்கள் மற்றும் 5,000 வீரர்களைக் கொண்டிருந்தது. சிவாஜி காலத்தில் மராட்டிய கடற்படையின் எழுச்சி, வெளிநாட்டவர் ஆக்கிரமிப்புக்கு எதிராக கடற்கரையை முதன்முதலில் பாதுகாத்தது" என்று கடற்படை வீடியோவில் கூறியது.

  • நீல எண்கோண வடிவமானது இந்திய கடற்படையின் பலதரப்பு அணுகல் மற்றும் பல பரிமாண செயல்பாட்டுத் திறனைக் குறிக்கும் எட்டு திசைகளைக் குறிக்கிறது.
  • நங்கூரம் சின்னம் உறுதியான தன்மையை குறிக்கிறது

இது வரை இந்திய கடற்படைக் கொடிகள் அடிமைத்தனத்தின் அடையாளமாக இருந்தன, அதற்குப் பதிலாக சத்ரபதி சிவாஜியின் உத்வேகத்தால் புதியதாக மாற்றப்பட்டுள்ளது என்று ஐஎன்எஸ் விக்ராந்தை இயக்கும் முன் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பழைய கொடியில் சிவப்பு செயின்ட் ஜார்ஜ் சிலுவை இருந்தது, இது இந்தியாவின் காலனித்துவ கடந்த காலத்துடன் தொடர்புடையது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News