இமாச்சலப் பிரதேசத்தில் சட்டசபைதேர்தல் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு துவக்கம்

himachal pradesh assembly polling பாஜ ஆட்சி செய்த மாநிலமான இமாச்சலப்பிரதேசத்தில் இன்று 68 தொகுதிகளுக்கான சட்டசபைதேர்தல் வாக்குப்பதிவானது காலை 8 மணி முதல் துவங்கியது.

Update: 2022-11-12 06:18 GMT

himachal pradesh assembly polling 



இமாச்சலப்பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ், ஆம்ஆத்மி, பாஜ ஆகிய தலைவர்களான பிரியங்கா காந்தி, கேஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர்  (கோப்பு படம்)

himachal pradesh assembly polling 

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இன்று காலை 8 மணி முதல் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இமாச்சலப்பிரதேச மாநிலத்திலுள்ள சட்டசபைக்கு மொத்தம் உள்ள தொகுதிகள் 68.இந்த தொகுதிகள் அனைத்திலும் இன்று காலை முதல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவானது துவங்கியுள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பாஜ ஆட்சி அமையுமா?

முதல்வர் ஜெய்ராம்தாக்குர் தலைமையில் கடந்த ஆட்சியானது பாஜஆட்சி நடந்தது. இம்மாநிலத்தினைப்பொறுத்தவரை கடந்த 1982 ம் ஆண்டு முதல் பாஜ மற்றும் காங்கிரஸ் ஆட்சிதான் மாறி மாறி நடந்து வருகிறது. இந்த முறை காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என சொல்லி வந்த நிலையில் மீண்டும் நாங்கள்தான் ஆட்சி அமைக்கப் போகிறோம் என பாஜ சார்பில் அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு உடல்நலம் சரியில்லாததால் இந்த தேர்தலின் பிரச்சாரத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை. மேலும் பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள அவரது மகனும் முன்னாள் காங்கிரஸ் கட்சித்தலைவருமான ராகுலும் கலந்துகொள்ளவில்லை.

himachal pradesh assembly polling 


இம்மாச்சல சட்டசபை தேர்தல் பணியில்  ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு எலக்ட்ரானிக் ஓட்டுப்பெட்டிகளை எடுத்துச் செல்கின்றனர். (கோப்பு படம்)

himachal pradesh assembly polling 

பிரியங்கா காந்தி அம்மாநிலத்தில் நடந்த பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்துள்ளார். ஆனால் ஆளும் கட்சியான பாஜ சார்பில் பிரதமர் மோடி மற்றும் பாஜ அகில இந்திய கட்சித்தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறைஅமைச்சரும் , பாஜ மூத்த தலைவருமான அமித்ஷா ஆகியோர் நேரடியாக பிரச்சாரம் செய்தனர்.

himachal pradesh assembly polling 


இமாச்சலில்  காலை  8 மணிக்கு துவங்கிய சட்டசபை வாக்குப்பதிவில் ஆர்வத்துடன் தங்களுடைய ஜனநாயக கடமையாற்ற வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள். (கோப்பு படம்)

himachal pradesh assembly polling 

டில்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ள கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் களம் இறங்கியுள்ளது. இருந்தபோதிலும் போட்டி என்பது பாஜவுக்கும் காங்கிரசுக்கு மட்டுமே. மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில் பிரதமர் மோடி பிரச்சாரத்தின் போது தங்களுக்கே மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பினை வாக்காளர்கள் வழங்க வேண்டும் என தீவிர பிரச்சாரம் செய்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதி

எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் மின்சார கட்டணத்தில் 300 யூனிட்கள் இலவசம், பெண்களுக்கு மாதந்தோறும் 1500ரூபாய் ஊக்கத்தொகை, உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜ சார்பில் பொதுசிவில் சட்டம், மாணவியருக்கு ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள், 8 லட்சம் பேருக்கு வேலை என அறிவி்த்துள்ளதால் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது டிசம்பர் 8 ந்தேதி எண்ணும் வாக்கு எண்ணிக்கையில் தெரியவரும்.

இன்று நடக்கும் இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் 68 தொகுதிகளுக்கு நடக்கிறது. இதில் மொத்தம் 412 வேட்பாளர்கள் களம் இறங்கி போட்டி போடுகின்றனர். அம்மாநிலத்தில் மொத்தம் 55,74,793 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மாலை 5 மணியோடு வாக்குப்பதிவு முடிவு பெறுகிறது. காலை 9 மணி நிலவரப்படி 4 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News