அமைச்சர் உதவியாளர் வீட்டில் ரூ. 20 கோடி சிக்கியது: அமைச்சர் கைது

Bangal Political News- மேற்கு வங்க தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சராக இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி உதவியாளர் வீட்டில் ரூ. 20 கோடி சிக்கியதை அடுத்து அமைச்சர் கைது

Update: 2022-07-23 07:14 GMT

மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி

Bangal Political News- மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரகத்தால் இன்று மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார் .

மேற்குவங்காளத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக இருப்பவர் பார்த்தா சட்டர்ஜி. இவர் இதற்கு முன்னதாக அம்மாநிலத்தின் கல்வித்துறை மந்திரியாக பணியாற்றி வந்தார். இவர் கல்வித்துறை மந்திரியாக இருந்த காலத்தில் அம்மாநிலத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

ஆசிரியர் நியமணம் மற்றும் அதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சிபிஐ-க்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் பணமோசடிகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.

நேற்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பார்த்தா சட்டர்ஜி, கல்வித்துறை மந்திரி பரீஷ் சந்திர அதிகாரி தொடர்புடைய இடங்கள் மற்றும் மாநில கல்வித்துறையில் முக்கிய பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளின் வீடுகள் என 13 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.


இந்த சோதனையில் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, சோதனையின் போது மந்திரி பார்த்தா சட்டர்ஜியிடம் நேற்று 11 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பார்த்தா சட்டர்ஜியின் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக 20 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அமைச்சரின் நெருங்கிய உதவியாளரிடமிருந்து ரூ.20 கோடி மீட்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த கைது நடந்துள்ளது. பணம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து திரிணாமுல் தலைவரிடம் இரவு முழுவதும் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையின் போது, ​​சாட்டர்ஜி அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் ஒத்துழைக்காததால், அவர் கைது செய்யப்பட்டார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News