மசாஜ் செய்வது எதற்கு தெரியுமா? மறக்காம படிச்சு பாருங்க ......

மனிதர்களின் ஆரோக்யத்தை பேணி காக்க பல்வேறு வகைகளில் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் உடலினை மசாஜ் செய்வதன் மூலம்உடல்வலி, மூட்டுவலி, இடுப்புவலி உள்ளிட்ட வலிகள் குணமாவதாக நம்புவதால் பலர் இந்த சிகிச்சை முறையினை மேற்கொள்கின்றனர்.

Update: 2022-08-03 07:14 GMT

முகத்தில் மசாஜ் செய்யப்படுகிறது (மாதிரி படம்)


 



மனிதர்கள் உடல்ஆரோக்யத்தை பாதுகாத்துக்கொள்ள பல்வேறு வகையான சிகிச்சை முறைகள் உண்டு. அலோபதி, ஹோமியோபதி, சித்தா, யுனானி, ஆயுர்வேதம்,  அக்குபஞ்சர் என அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வகையில் மருத்துவ உலகம் விரிந்துகிடக்கிறது. இதுமட்டும் அல்லாமல் இயற்கை வைத்திய முறைகள் நேட்.சுரோபதி என்ற பெயரிலும் சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். உடலில் ஏற்படும் வலிகளைக் குறைக்க உடல் மசாஜ் செய்துகொள்ளும் நடைமுறையும்  இன்றளவில் உலகமெங்கும்  தொடர்கிறது. உடல் மசாஜ்செய்வதினால் நமக்கு என்ன பலன் என்பதைப்பற்றி விரிவாக பார்ப்போமா?

ச்சுவிடீஷ் மசாஜ்

ச்சுவிடீஷ் மசாஜ் என்பது உடல் முழுவதும்  இரு கைகளை கொண்டு மசாஜ் செய்வதன்   மூலம் தசைகளில் உள்ள வலி  அகலும். மனமும் உடலும் இதமாக இருக்கும். இதிலும் பல வகையான   முறைகளைப் பயன்படுத்தி  வருகின்றனர். கழுத்துப்பகுதியிலிருந்து  நுனி கால் விரல்கள் வரை செய்யப்படுகிறது.  இருதயத்திற்கு ரத்தத்தை  செம்மையாக  செல்வதற்கு , முதுகெலும்பிற்கு  தசைகள்,  எலும்புகள்,  கைகள், இடுப்பு, கால்கள்,  விரல்கள், என தனித்தனி பாகங்களுக்கு   ஏற்றதாற்போல் மசாஜ் செய்யப்படுகிறது.

சீனமசாஜ்

சீன மசாஜ்  மருத்துவம் கலந்து செய்யக்கூடிய  ஒரு மசாஜ் ஆகும்.  நான்கு விதமான  மசாஜ் முறைகளை இவர்கள் செய்து வருகிறார்கள்.  முக்கியமாக மருத்துவ சிகிச்சைகளுக்கே   இவர்கள் அதிக முக்கியத்துவம்  கொடுத்து வருகிறார்கள்.  அறுபது நிமிடத்திலிருந்து  தொண்ணுாறு  நிமிடம் வரை   ஒருவருக்கு இவர்கள் செய்து வருகின்றனர்.  ஒரு  சிலமுறைகள்  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு  முன்பிருந்தே   நடைமுறையில்  இருந்து வருகிறது. 

துய் நா எனப்படும்  சிகிச்சை இவர்களிடையே இன்று வரை பிரசித்தி பெற்று வருகிறது. எலும்பு முறிவு,  எலும்பு நகர்வு,  அஜீரண கோளாறு, சுவாச கோளாறுகள், மகப்பேறு  பிரச்னைகள்  என பலவற்றுக்கும் நிவாரணம் தருபவை. துய் நா  மசாஜ் மூலம்  நீண்ட காலமாக  வலியால்  அவதியுறும் கழுத்துவலி, தோல்வலி, இடுப்புவலி,  அசைக்க முடியாத சில மூட்டுகள் அனைத்துக்கும் நிவாரணம்  தரவல்லது. 

துய்நா மூலம்  தலைவலி, ஒற்றைத்தலைவலி, மலச்சிக்கல், மன உளைச்சல், அனைத்துக்கும் செய்யப்படுகிறது.மென்மையான திசுக்கள் அடிபடுதல், கிழிந்து  விடுதல் ஆகியவற்றுக்கு மென்மையான   முறை கையாளப்படுகிறது. இம்முறை  வழி ரத்தத்தை   சீராக செல்லும்படி  செய்தல், ரத்த கட்டிகளை  அகற்றுதல் போன்றவற்றை செய்கிறார்கள். துய்நா மசாஜ் மூலம் முக ஒப்பனை உடல் பருமன்,  மனக்குழப்பங்கள்,  அதிகமான சோர்வு,  நரம்பு வலிகள், என பலவற்றுக்கு செய்யப்படுகிறது.துய் நா மூலம் நரம்பு மண்டலங்களை சரி செய்து உடலுக்கு   வலுவை கொடுக்கும். 

தாய் மசாஜ்

தாய் மசாஜ் என்பது தனிப்பட்ட பெருமைக்குரியதாகும். கைகளினால் குணமாக்கும் ஒரு அற்புதமான  மசாஜ் ஆகும்.  இரண்டாயிரத்து ஐநுாறு  வருடங்களுக்கு  முன்பு  இந்தியாவில் புத்தருக்கு   மருத்துவராக இருந்த  ஜிவாக்கா குமார் பாச்சா என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு தாய்லாந்திற்கு சென்று  நாளடைவில்  சீனாவுக்கு  சென்று சீனர்களிடையே   பிரசித்தி பெற்று விளங்குகிறது. பொதுவாக  இது  கால்களில்  அதிகமாக அழுத்தம் கொடுத்து உடலிலுள்ள  பாகங்களை   செம்மை செய்வதே இதன் முக்கிய வேலை. 

நன்மைகள்

உடலில் ரத்த ஓட்டத்தை சரி செய்து, உடலில் இருக்கும்  விஷ தன்மைகளை அகற்றும். நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும்.  உடலிலுள்ள விரைப்பான  பாகங்கள், தசைகள், மூட்டுகள்,  அனைத்தையும் நெகிழ்வு  கொடுக்கவல்லது.மனஅழுத்தத்திற்கு நிவாரணம்கொடுக்கும். நல்ல உறக்கத்தை கொடுத்து புத்துணர்ச்சி தரும். 

சியாட்சு மசாஜ்

ஜப்பானியர்களால்  அழைக்கப்படும் சியாட்சு மசாஜ் ஊசி வழி அழுத்துதல்   முறைகளை  பின்பற்றியே  செய்வதாகும். ஜப்பானியர்கள்  பெரும்பாலும்  சீனர்களுடைய  முறைகளையே  பின்பற்றியதாக  இருக்கிறது.  கைவிரல்கள்,  கை பெருவிரல், உள்ளங்கைகளை பயன்படுத்தியே   செய்கிறார்கள்.  எண்ணையோ  அல்லது க்ரீம்களை  இவர்கள் மசாஜ்  செய்வதற்கு பயன்படுத்துவது கிடையாது.  குறைந்தது  தொண்ணுாறு நிமிடங்கள்  இவர்கள் மசாஜ் செய்வார்கள்.  ஜப்பானியர் பல விதமான மசாஜ் முறைகளை பயன்படுத்துகிறார்கள்.  உடலிலுள்ள எல்லா அழுத்த புள்ளிகளுக்கு  அழுத்தம் கொடுக்கிறார்கள்.  கை நுனி விரல்களையும்  அவர்கள் விட்டு வைப்பதில்லை. 

பாலி நாட்டு மசாஜ்

பாலிநாட்டிலுள்ள   தேவகாய எண்ணெயுடன்  இஞ்சி சேர்த்து மசாஜ் செய்வார்கள்.  நறுமண மசாஜ் என்று கால்களுக்கு   சந்தன கட்டை,  மல்லிகைப்பூ,  வெட்டிவேர், சேர்த்து   செய்வார்கள். 

விளையாட்டு வீரர்களுக்கு 

விளையாட்டு  வீரர்களுக்கென  தனிப்பட்ட  முறையில்  மசாஜ் செய்யும் முறை உண்டு.  விளையாடும்போது  ஏற்படும் அடிகளுக்கும், தசை பிடிப்புகளுக்கும்  ஏற்றாற்போல்  மசாஜ் செய்யப்படுகிறது.

கல் மசாஜ்

இந்த மசாஜ்  உப்புக்கல்லை சூடாக்கி,  அல்லது  குளிர்ச்சியாக்கி  அழுத்த புள்ளிகளின் மேல் வைப்பதன் மூலம், மெது மெதுவாக  அதன் சூடு   உடலுக்குள் சென்று   உடலிலிருக்கும்  , டென்ஷன், ரத்த ஓட்டம் ஆகியவற்றை   சீர்படுத்தி  புத்துணர்வை  கொடுக்க வல்லது. 

தலை மசாஜ் 

தலை மசாஜ் என்பது தலைவலி,  தலை மயக்கம், தலைச்சுற்றல், ஆகியவற்றால் அவதிப்படுபவர்களுக்கு  நல்ல ஒரு நிவாரணம் கொடுக்கும்.  தலை நரம்புகளில்  செய்யும்போது   அது முதுகெலும்பினை   ஊடுருவி, முதுகெலும்பின் அடிப்பாகம்   வரை  சென்று  நிவர்த்தியாககூடிய  தன்மை வாய்ந்தது.

நாற்காலிமசாஜ்

நாற்காலி மசாஜ் என்பது ஒருவர்  சவுகரியமாக  நாற்காலியில் உட்கார்ந்து சுமார் பதினைந்து நிமிடங்கள் கழுத்து, முதுகு,  இடுப்பு பகுதிகளை  எண்ணெய் இல்லாமல்  செய்யக்கூடியது.

முக மசாஜ்

பெரும்பாலும் எல்லோரும்  விரும்பி செய்து கொள்ளும்  ஒன்று முக மசாஜ்,  மிக பொலிவு   முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை போக்க முகம்  பொலிவுடன் இருக்க வைக்கும்.  கரும்புள்ளிகளை  அகற்றி முகத்திற்கு  அழகினை சேர்க்கும்.

வட்சு

வட்சு மசாஜ்  என்பது, மசாஜ்  நிறுவனங்களில்  பிரத்தியேகமாக   நிறுவப்பட்ட சுடுநீர்  நீச்சல் குளத்தில் செய்யும் முறையாகும்.  இதில் வாடிக்கையாளர் கண்களை  தண்ணீருக்குள்  ரிலாக்ஸ்சாக செய்யும் முறையாகும். 

நன்றி ;சரண்யா

Tags:    

Similar News