உடல் எடை குறைத்து 'ஸ்லிம் லுக்' அசத்திய விஜய் சேதுபதி

vijay sethupathi slim look image- நடிகர் விஜய் சேதுபதி, தனது உடல் எடையை குறைத்து 'ஸ்லிம்' ஆக மாறியுள்ளார். அவரது 'ஸ்மார்ட்' அழகை ரசிக்கும் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

Update: 2022-12-14 07:38 GMT

vijay sethupathi slim look image-நடிகர் விஜய் சேதுபதி.

vijay sethupathi slim look image, vijay sethupathi massive weight loss picture goes viral-  தமிழ் சினிமாவில் ஒரே காலகட்டத்தில் 'ஹீரோ'வாகவும், வில்லனாகவும் நடிக்கும் திறமையான நடிகர் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி. துவக்கத்தில், துணை நடிகர்களில் ஒருவராக 'புதுப்பேட்டை', 'வெண்ணிலா கபடிக்குழு' படங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி. பின் படிப்படியாக உயர்ந்து, 'ஹீரோ'வானார். இவருக்கு 'பீட்சா' படமும், ' நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படமும், 'சூது கவ்வும்' படமும், தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகத்தை தந்தது. குறிப்பாக, 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில், 'சுமார் மூஞ்சி குமார்' கேரக்டரில், குமுதா பின்னால் சுற்றும் அந்த விடலை பையன் கேரக்டர், அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைத்தது.


தொடர்ந்து, விஜய் சேதுபதி நடித்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடித்தது, அவருக்கு மேலும் வெற்றியை தேடித்தந்தது. இதுவே, மாஸ்டர், விக்ரம் படங்களில், அவர் வில்லனாக நடிக்க, பிள்ளையார் சுழியாக அமைந்தது.   

நடிக்க வந்த ஆரம்பத்தில் ஒல்லியாக இருந்தவர், பின்னாளில் எடை அதிகரித்து 'சால்ட் அண்ட் பெப்பர் லுக்'கில் காணப்பட்டார். நடிகர் விஜய் சேதுபதி. அவர் மீது ரசிகர்கள் வைக்கும் குற்றச்சாட்டே, உடல் எடையை கண்டுகொள்ளாமல், 'பிட்' ஆக இல்லை என்பதுதான். அதற்கு பதில் சொல்லும் விதமாக, தற்பேதாது உடல் எடையைக் குறைத்து, அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் லைக்ஸைக் குவித்து வருகிறது.


நடிகர் விஜய் சேதுபதி, சமீபத்தில் 'டிஎஸ்பி' படத்தில் நடித்தார், இது பாக்ஸ் ஆபீஸில் தோல்வி அடைந்தது. தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு செல்பியை பகிர்ந்துள்ளார். உடனே அந்தப் படத்துக்கு, 'லைக்ஸ்' மழை பொழிய ஆரம்பித்தது. உடல் எடையைக் குறைத்து ஒல்லியாக இருக்கும் விஜய் சேதுபதியை பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளனர் ரசிகர்கள்.

விஜய் நடித்த 'மாஸ்டர்' மற்றும் கமல்ஹாசனின் 'விக்ரம்' உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இந்த படங்களில் கூட, அவர் சற்று குண்டான உடல் தோற்றத்தில் காணப்பட்டார். 

இதனால், எடை அதிகரித்ததால் இனி அவர் வில்லனாக தான் நடிக்க முடியும் என்று பேச்சுகள் எழுந்தன.  இந்நிலையில் தற்போது தனது உடல் எடையை குறைத்து 'ஸ்லிம்'மான தோற்றத்தில் புதிய படத்தை வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி. தற்போது அந்தப் படம் இணையத்தில் லைக்ஸை குவித்து வருகிறது. பலரும், இந்த படங்களை பகிர்ந்து வருவதால், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்தில், தற்போது விஜய் சேதுபதி நடித்து வருகிறார். ஒருவேளை, இந்த படத்தில் நடிக்கும் கேரக்டருக்காக, இப்படி உடல் எடையை விஜய் சேதுபதி குறைத்திருக்கலாம் என்ற ஒரு பேச்சும் கோலிவுட்டில் அடிபடுகிறது.

Tags:    

Similar News