சிறு வயது நடிகர் விஜய் தங்கையின் படத்திற்கு மலர் தூவும் காட்சி வைரல்

Actor Vijay Sister -சிறு வயது நடிகர் விஜய் தங்கையின் படத்திற்கு மலர் தூவும் காட்சி வைரல் ஆக பரவி வருகிறது.

Update: 2022-08-18 06:46 GMT

Actor Vijay Sister -நடிகர் விஜய் தமிழ் சினிமா உலகில் மட்டும் அல்ல. இந்திய அளவில்  சினிமா ரசிகர்களால் முக்கியமாக கவனிக்கும் ஒரு பிரபலமாக உள்ளார். தமிழை தாண்டி ஹிந்தியில் கூட விஜய்யின் படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

நடிகர் விஜய் இப்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து வாரிசு என்ற திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் ஃபஸ்ட் லுக் மட்டும் இதுவரை வெளிவந்தள்ளது.

இந்நிலையில் தற்போது விஜய்யின் அரிய வீடியோ ஒன்று டுவிட்டரில் வலம் வருகிறது. அது என்ன வீடியோ தெரியுமா? சிறு வயது விஜய் சிறுவயதில் தனது தங்கை வித்யாவின் புகைப்படத்திற்கு மலர்தூவி பிரார்த்தனை செய்வது போன்ற காட்சி தான். இந்த வீடியோ விஜய் ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News