த்ரிஷா பகிர்ந்த புதிய லுக் போஸ்டர்.. ரசிகர்கள் மத்தியில் வைரல்

Trisha and aishwarya rai Ponniyin selvan movie new look - பொன்னியின் செல்வன் படத்தின் புதிய லுக் போஸ்டரை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நடிகை திரிஷா பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.

Update: 2022-09-16 06:50 GMT

Trisha and aishwarya rai Ponniyin selvan movie new look - லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30ம் தேதி ரிலீசாகிறிது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரிலீசுக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் நடிகர், நடிகைகள் களமிறங்கியுள்ளனர்.

ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பெயரை 'ஆதித்த கரிகாலன்' என மாற்றியுள்ளார். நடிகை த்ரிஷா குந்தவை என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஆதித்த கரிகாலன் விக்ரமின் நண்பன் வந்திய தேவனாக கார்த்தி நடித்துள்ளார். தங்கை குந்தவையாக த்ரிஷாவும், தம்பி அருண்மொழியாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகள் சென்னை, கேரளா, கர்நாடகா, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி, துபாய் ஆகிய இடங்களில் நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நடிகை த்ரிஷா இன்று தனது இன்ஸ்டாகிராமில், 'இரு பெண் புலிகள்' என பதிவிட்டு நந்தினி மற்றும் குந்தவை கதாபாத்திரத்தின் புதிய லுக்கை வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News