செப்டம்பர் 2 ல் 'வெந்து தணிந்தது காடு' பட ஆடியோ, டிரெய்லர் வெளியீடு

Simbu's Vendhu Thanindhathu Kaadu audio launch - லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ஆடியோ, டிரெய்லர் வரும் செப்டம்பர் 2ம் தேதி வெளியாகிறது.

Update: 2022-08-23 08:02 GMT

Simbu's Vendhu Thanindhathu Kaadu audio launch- வரும் செப்டம்பர் 2ல், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஆடியோ, டிரெய்லர் வெளியீடு 

Simbu's Vendhu Thanindhathu Kaadu audio launch- 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவித்த நிலையில், தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது.

முதல்கட்டமாக இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் அறிவிப்பு, தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2 ஆம் தேதி, மாலை 5 மணிக்கு ஆடியோ மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகும் என இந்த படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது.


மேலும் இந்த விழா நடைபெற இருக்கும் அரங்கம் குறித்து அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளதால், இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில், சிம்பு, சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Tags:    

Similar News