முதல்நாள் ஒருத்தரு கூட தியேட்டர் வரல! - சசிக்குமார்

அயோத்தி படம் குறித்து இயக்குநர், நடிகர் சசிக்குமார் பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Update: 2023-03-10 13:37 GMT

நம்ம உதவி பண்ணிட்டா அத எதிர்பார்க்கக்கூடாது. பதிலுக்கு செய்யணும்னு நாம நினைக்ககூடாது. நான் வளர்ந்த விதம் கூட அப்படி இருக்கலாம். அதனாலதான் இந்த படத்த பண்ணிருக்கேன்னு நினைக்குறேன். நான் இதுவரைக்கும் அப்படி பாத்தது இல்ல. உதவினு வந்தா நான் செய்யத்தான் செய்வேன். எனக்குன்னு யாரும் வரல அத நான் எதிர்பார்க்கவும் இல்ல.

எங்கேயும் யாரும் நமக்குன்னு வரமாட்டாங்க. நாம உழுந்தா நாமதான் கையூன்றி எந்திக்கணும். உங்கள யாரும் இங்க தூக்கி விடமாட்டாங்க.

நான் பண்ணுவேன். மந்திரமூர்த்தி நான் அறிமுகப்படுத்துன 10வது இயக்குநர். பசங்க படம் வந்தப்ப நான் சொல்லியிருந்தேன் 10 இயக்குநர்கள நான் அறிமுகப்படுத்துவேன் அதுக்கப்றம்தான் படம் பண்ணுவேன்னு. இப்ப 10 தாண்டியாச்சு. இனி படம் பண்ண போறேன் என்று கூறுகிறார் சசிக்குமார்.

என்னய வச்சி ஜெயிச்ச எந்த இயக்குநரும் என்னய வச்சி இரண்டாவது படம் எடுக்கவே இல்ல. அவங்க வரணும்னு நான் எதிர்பார்க்கல. ஒரு நம்பிக்கை நமக்கு வேணும். நாமளே எந்திருச்சாதான் அது நடக்கும்.

எனக்கு நண்பர்கள் மிக அதிகம். என்ன ய சுத்தி நிறைய பேர் இருந்தாங்க. இப்ப பாத்தா ஒருத்தரையும் காணோம். அப்படி ஒரு நாள் உங்களுக்கு வரும்போது கண்ண கட்டி காட்டுல விட்டமாதிரி இருக்கும். அதுக்கு நாம தயாரா இருக்கணும்.

நல்ல சினிமா மக்கள்கிட்ட போயிட்டா அவங்க கொண்டு போயிடுவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு இப்பவும் நம்பிக்கை இருக்கு. எனக்கு பழக்கப்பட்ட விசயம்தான் இது. நான் உதவி இயக்குநரா முதல் படம் சேது பண்ணும்போதும் இதுதான். வெள்ளிக்கிழமை கூட்டமே வரல.. சனிக்கிழம கொஞ்சம் பேசப்படுது. அதுக்கப்றம் மக்கள் வரவேற்குறாங்க.

இதே என் முதல் படம் சுப்பிரமணியபுரம் தியேட்டர் கிடைக்கல, ரொம்க கம்மியான தியேட்டர்கள்தான் கிடச்சிது. ஆனா படம் மக்கள்கிட்ட போயி அவங்க எதிர்பார்த்து தியேட்டருக்கு படையெடுத்தாங்க. அப்றம் இத கொண்டாடுனாங்க.

இன்னிக்கு அயோத்திக்கும் இதுதான் நடந்துருக்கு. சாதி மதத்த தாண்டி மனிதம்தான் முக்கியம்னு இந்த படம் சொல்லுது.

இயக்குநர்களான கௌதம் மேனன், செல்வராகவன்லாம் என்னய நடிக்காதீங்கன்னு சொல்லிட்டு அவங்களே நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. நம்மள விட பிஸியா நடிச்சிட்டு இருக்காங்க. கௌதம் மேனன் என்னய வெளிநாட்டு இயக்குநரோட ஒப்பிட்டு பேசினார். ஆனா எனக்கு அவங்கள தெரியாது. எனக்கு தெரிஞ்சதெல்லாம் பாரதி ராஜா, பாலச்சந்தர், மகேந்திரன் மாதிரி நம்ம இயக்குநர்களதான். மற்றவங்களையும் கொண்டாடுங்க வேணாங்கல ஆனா இவங்களயும் கொண்டாடணும்.

Tags:    

Similar News