'லேட்' ஆக வந்த சிம்ரன்; 'பேக் அப்' சொன்ன எஸ்ஏசி

sac chandrasekar bold decision when simran comes late- ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் சிம்ரன் நடித்த போது, ஒரு நாள் தாமதமாக ஷூட்டிங் வந்த சிம்ரனால், கடுப்பான எஸ்ஏசி, ‘பேக்அப்’ சொன்ன தகவல், வெளியாகி உள்ளது.

Update: 2023-02-09 07:04 GMT

sac chandrasekar bold decision when simran comes late- நடிகை சிம்ரன் செய்த தவறால், சிவாஜி நடித்த படத்தின் படப்பிடிப்பு ரத்து.

sac chandrasekar bold decision when simran comes late- நடிகை சிம்ரன் செய்த செயலால், கடுப்பான இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர், படப்பிடிப்பை ரத்து செய்த தகவல், தற்போது வெளியாகி, வைரலாகி வருகிறது.


தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பல வெற்றிகளை பார்த்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவருடைய இயக்கத்தில் நடித்து, இன்று தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் விஜய். தன்னுடைய தந்தை எஸ்.ஏ.சி-யின் இயக்கத்தில் விஜய் பல படங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று தான் 'ஒன்ஸ் மோர்'. இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து விஜய் நடித்திருப்பார். மேலும் இப்படத்தில் கதாநாயகியாக சிம்ரன் நடித்திருந்தார்.


நடிப்பில் இமயமாக இருந்த சிவாஜி கணேசனுடன், விஜய் மகனாக நடித்திருப்பார். மேலும், இதில் தந்தையின் காதலியான சரோஜா தேவியை, சிவாஜி கணேஷனுடன் விஜய் சேர்த்து வைப்பதாக, கதை இருக்கும். துவக்கத்தில், 'பிளே பாய்' போல, பொறுப்பின்றி காணப்படும் விஜய், ஒரு கட்டத்தில் பொறுப்பான மகனாக மாறி, தந்தையின் காதலுக்கு உதவுவார். நீண்ட காலத்துக்கு பிறகு, சிவாஜி - சரோஜா தேவி ஜோடியாக நடித்திருப்பா். அதுவும், ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.சிம்ரன் இந்த படத்தில் நடித்த போது, சில படங்களில் மட்டுமே நடித்து, வளர்ந்து வரும் நடிகையாகவே இருந்தார். அதே வேளையில், அவரது நடிப்பும், நடனமும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.


இந்நிலையில், 'ஒன்ஸ்மோர்' படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரத்தில், படப்பிடிப்புக்கு நடிகை சிம்ரன் ஒரு நாள் தாமதமாக வந்துள்ளார்.

இதனால் கடுப்பான, படத்தின் இயக்குநர் எஸ்.ஏ.சி,  உடனடியாக படப்பிடிப்பை பேக்- அப் செய்துவிட்டாராம். அந்த அளவிற்கு மிகவும் ஸ்ட்ரிக்ட்டான இயக்குநராக இருந்தாராம்.


எஸ்ஏசி என சுருக்கமாக அழைக்கப்படும் எஸ்ஏ சந்திரசேகர், இயக்குநர்களில் புரட்சிக்கரமான படங்களை இயக்கி, சமூக சிந்தனை மிக்க படைப்புகளை தந்த இயக்குநராக பெயர் பெற்றவர். 'ரசிகன்' என்ற படத்தின் மூலம், தனது மகன் விஜயை, நடிகராக அறிமுகப்படுத்தினார். விஜய்காந்துடன் விஜயை 'செந்துாரப்பாண்டி' படத்தில், நடிக்க வைத்து விஜய்க்கு பலதரப்பட்ட ரசிகர்களின் மத்தியிலும் நல்ல ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தி தந்தார்.


இயக்குநராக மட்டுமின்றி, பல படங்களில் நடிகராக நடித்தும் ரசிகர்களின் மனதை வென்றவர் எஸ்ஏசி. சமீபத்தில் கூட, 'டிராபிக் ராமசாமி' படத்தில், நடித்திருந்தார். வெங்கட்பிரபு இயக்கத்தில், சிம்பு நடித்த 'மாநாடு' படத்தில், முதலமைச்சராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பு, நடிகை சிம்ரன் ஒரு நாள் தாமதமாக வந்ததால், படப்பிடிப்பையே ரத்து செய்திருக்கிறார் எஸ்ஏசி. அதுவும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்த நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பையே 'பேக் அப்' சொன்னதால், படக்குழுவினரே ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டார்களாம். அந்த தகவல் இப்போது வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News