வாரிசு படத்தில் தளபதி விஜய் பாடிய ''ரஞ்சிதமே... ரஞ்சிதமே... பாட்டு...செம ஹிட்....
Ranjitham Name Meaning in Tamil- தமிழ் சினிமாவில் மட்டும் ஒன்னா கதை நல்லா யிருக்கணும்...இல்லாவிட்டா பாட்டு நல்லா இருக்கணும்... அப்படி இருந்தாதான் படத்துக்கு தமிழ் ரசிகர்கள்கிட்ட வரவேற்பு கிடைக்கும்...
Ranjitham Name Meaning in Tamil-நடிகர் தளபதி விஜய் மற்றும் கதாநாயகி ராஷ்மிகா மேனனுடன் ரஞ்சிதமே பட பாடல் காட்சியில் (கோப்பு படம்)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடிப்பதோடு தற்போது கதாநாயகனாக நடிப்பவர்களே பாடல் பாடுவதும் ஒரு டிரென்டாகி வருகிறது. அந்த வகையில் வாரிசு படத்தின் ஹீரோவான தளபதி விஜய் அப்படத்தில் வரும் ரஞ்சிதமே... ரஞ்சிதமே பாடலை உடன் மானசியோடு பாடி கலக்கியுள்ளார். பாடல் வெளியிடப்பட்டு விட்டதால் பட்டி தொட்டிஎல்லாம் இந்த பாடல்தான் தற்போது பிசியாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.
படம் ரிலீசாவதற்கு முன்பே இப்பாடல் இவ்வளவு பேமஸ் ஆகியுள்ளதால் படமும் எதிர்பார்த்த கதையம்சத்தோடுதான் எடுத்திருப்பார்கள் என்ற எண்ணமானது ரசிகர்கள் மனதில் ஓங்கியுள்ளது. அண்மைக்காலமாக நடிகர் தளபதி விஜய் நடிக்கும் படங்களில் சமுதாய பிரச்னைகளை மையமாக வைத்து நடிப்பார். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு பொது பிரச்னைக்கான தீர்வு அந்த படத்தின் வாயிலாக இறுதியில் கிடைப்பது போல் வரும். வெறுமனே சண்டை, காமெடி என்ற படத்தில் அவர் கால்ஷீட்டே தருவதில்லை. படங்களை அதன் கதைகளை நிதானமாகவே தேர்ந்தெடுக்கிறார். வருடத்திற்கு ஒரு படம் என்றாலும் அப்படம் தன் பெயர் சொல்லவேண்டும் என்பதில் கவனத்துடன் உள்ளார். அந்த வகையில் வாரிசு வெற்றிக்கொண்டாட்டத்தினை நோக்கி நடைபோடுமா? என்பது படம் ரிலீசான பின்புதான் தெரியவரும். சரி அப்படி என்னாங்க? அந்த ரஞ்சிதம் பாடலின் வரிகள்... பார்த்துடுவோமா? வாங்க... வாங்க....
ஒரு பாடலுக்கு மட்டும் ஏகப்பட்ட செட்டிங்ஸ் போட்டு கலக்கலோ கலக்கிட்டாங்க போங்க... விஜயின் பாட்டும் மானசியின் பாட்டும்...ரஞ்சிதமே...ரஞ்சிதமே....என விஜய் அழுத்தி பாடும்போது பாட்டின் மெருகும் கூடுகிறது.
இப்பாட்டுக்கு பெரிய பிளஸ் பாயின்ட்டே இசை தான்போங்க... ஊது ஊதுன்னும் அடி அடின்னும் அடிச்சிருக்கார்.... மேளதாளத்தினை... ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமாக இந்த பாடல் உள்ளது ரசிகர்களுக்கு பிடித்து போனது...எங்கு சென்றாலும் இந்த பாட்டுதாங்க ஒலிக்குது ....வித விதமான இடங்களில் இந்த பாடலை டைரக்டர் ஷீட் செய்திருப்பதுகூடுதல் சிறப்பு...இடை இடையே வசனம் என்னா மாமா... என்ற வசனம் வேறு... போடு போடுன்னு மியூசிக்தான் இந்த பாட்டுக்கே கூடுதல் சிறப்பினை தருகிறது. ஒரு முறைதான் கேட்டு பாருங்களேன்...வாரிசின் ரஞ்சிதமே ரஞ்சிதமே... டைரக்டர் வம்சிபைடிபல்லி
வாரிசு படத்தின் போஸ்டர் (கோப்பு படம்)
இவர் தமிழ் தெலுங்கு இரண்டிலும் இப்படத்தினை டைரக்ட் செய்கிறார். மேலும் இசையமைப்பாளர் எஸ்.தமன்.. நல்லாத்தான் பண்ணியிருக்கார் போங்க... கூடுதல் சிறப்பு என்னான்னா கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவோட தளபதியின் ஆட்டமோ ஆட்டந்தாங்க இந்த பாடலை பட்ட கிளப்ப வெச்சிருக்கு... அவரே பாடறதால பல கட்ட உணர்ச்சி மிகுந்த நடிப்போடு இந்த பாடலில் டான்ஸ் ஆடியிருக்கிறாருன்னா பார்த்துக்கங்களேன்...
கட்டு மல்லி கட்டி வெச்சா
வட்ட கருப்பு பொட்டு வெச்சா
சந்திரனில் ரெண்டு வெச்சா
சாரா பாம்பு இடுப்பு வெச்சா
நட்சத்திர தொட்டி வெச்சா
கரும்பு கோடு நெத்தி வெச்சா
இஞ்சி வெட்டி கன்னம் வெச்சா
இம்மாதூண்டு வெட்கம் வெச்சா
நடிகர் விஜய் கதாநாயகி ராஷ்மிகா மேனன் (கோப்பு படம்)
நெத்தி பொட்டில் என்ன தூக்கி
பொட்டு போல வெச்சவளே
சுத்து பட்டு ஊரே பாக்க
கண்ணு பட்டு வந்தவளே
தெத்து பள்ளு ஓரத்துல
உச்சு கொட்டும் நேரத்துல
பட்டுனு பாத்தியே
உச்ச கட்டம் தொட்டவளே
ஹேய் ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே
ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
அடி ரஞ்சிதமே .. ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
நடிகர் விஜய் கதாநாயகி ராஷ்மிகா மேனன் (கோப்பு படம்)
நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
மனசு சத்திரமே சத்திரமே
நீ நித்திர நித்திர நித்திர
கெடுக்கும் சித்திரமே சித்திரமே
கட்டு மல்லி கட்டி வெச்சா
கலக்கலக்கா பொட்டு வெச்சா
சந்திரனில் ரெண்டு வெச்சா
சாரா பாம்பு இடுப்பு வெச்சா
வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள
உச்ச கட்டம் தொட்டவளே
ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே
அலங்கார அல்லி நிலா
ஆட போட்டு நின்னாளே
அலுங்காத அத்தை மக
ஆட வந்தாளே
நடிகர் விஜய் கதாநாயகி ராஷ்மிகா மேனன் (கோப்பு படம்) ரஞ்சிதமே ....ரஞ்சிதமே...பாடல் உடையில்
ஏய் அட காத்து வெச்ச முத்தம்
அஞ்சு ஆறு தந்தாளே
மல ஊத்து மூலிகையா
மூச்ச தந்தாளே
ஒன்னாங்க ரெண்டாங்க
எப்போ தேதி வைப்பாங்க
மூணாங்க நாலாங்க
நல்ல சேதி வைப்பாங்க
ஆமாங்க ஆமாங்க
வாரங்க வாரங்க
ஆதி சந்தனமே சஞ்சலமே
முத்து பெத்த ரத்தினமே
ஹேய் ரஞ்சிதமே .. ஹே ரஞ்சிதமே
ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
இன்னா மாமா உங்க ஆட்டத்துக்கு
ஊரே ஆடுமே
அதுக்கு ஒரு அடிய போட்டு விடுவோம்
அப்படிங்கிற
ஹ்ம் ஹ்ம் ….
கட்டு மல்லி கட்டி வெச்சா
கலக்கலக்கா பொட்டு வெச்சா
சந்திரனில் ரெண்டு வெச்சா
சாரா பாம்பு இடுப்பு வெச்சா
வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள
உச்ச கட்டம் தொட்டவளே
ரஞ்சிதமே ..ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
மனசு சத்திரமே சத்திரமே
நீ நித்திர நித்திர நித்திர
கெடுக்கும் சித்திரமே சித்திரமே
ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே…
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2