kamal hassan diwali celebration தேவர் மகன் வேட்டி சட்டையில் தீபாவளி கொண்டாடிய உலக நாயகன்

Kamal Hassan Ddiwali Celebration - பண்டிகைகள் என்பது சாதாரண மக்களுக்கானது மட்டுமல்ல. யார் யார் இவ்வுலகில் உயிர்வாழ்கின்றனரோ அவர்கள் அனைவருக்கும் பண்டிகைகள் உண்டு. அதனைக்கொண்டாடுவது அவரவர்களின் வசதிகளைப் பொறுத்தது.

Update: 2022-10-26 06:20 GMT

தீபாவளி பண்டிகையை பட்டுவேஷ்டி சட்டையோடு கொண்டாடிய நடிகர் கமல்ஹாசன்.


kamal hassan diwali celebration


kamal hassan diwali celebration


நடிகர் கமல்ஹாசன் மகள் அக்‌ஷரா, தேவர்மகன் படத்தின் ஸ்டில்நடிகர் திலகம் சிவாஜி கணேசனோடு.

 

தீபாவளி என்றாலே உலகம் முழுவதும் உள்ள தமிழர்களாகிய இந்துக்களுக்கு கொண்டாட்டம். அதாவது நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா அழித்த நாளைக் கொண்டாடுவதே தீபாவளி. அதாவது இருளை அகற்ற வந்த ஒளி என கொள்ளலாம்.அதிகாலை எழுந்து கங்காஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடிவிட்டு ஒரு சில ஸ்வீட் காரங்களை சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த நாளில் பெற்றோர்களாகிய வயதில்மூத்தவர்களிடம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே ஆசி பெறுவதும் வழக்கம்.

இந்தியாவே கோலாகலமாக கொண்டாடிவிட்டது தீபாவளிப் பண்டிகையை. கோலிவுட் நடிகர்களும் இப்பண்டிகைக்கு விலக்கல்ல. வழக்கமாக இவர்கள் நடித்த படங்கள் ரிலீஸ் ஆவது முன்பெல்லாம் வழக்கமாக இருந்தது. தற்காலத்தில் பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டதாலும் போட்டிகள் பெருகிவிட்டதாலும் படம் முடிந்தவுடனே ரிலீசிற்கு நாள் குறித்து உடனே ரிலீஸ் செய்து விடுகின்றனர். கடந்த 10 அல்லது 15 வருடத்திற்கு முன்பெல்லாம் தீபாவளி என்றால் குறைந்தபட்சம் 10 படங்கள் ரிலீஸ் ஆகும். எந்த படத்தினை பார்ப்பது? எதனை விடுவது என ரசிகர்களே குழம்பி போய்விடுவர்.ஒரே நாளில் 4 பேரின் படத்தினைப் பார்த்தவர்கள் எல்லாம் நாட்டில் உள்ளனர் தெரியுமா? சாப்பிடாமல் கூட. ஆக சினிமா ரிலீஸ் அன்றைய நாளில் அதாவது தீபாவளி தினத்தில் தற்போது அதிகம் இல்லாமல் போனதற்கு காரணமே போட்டிதான்.

உலக நாயகன் என அனைவராலும் அழைக்கப்படுபவரும், தற்போது விக்ரம் -2 படத்தின் நாயகனுமான நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய தீபாவளியை தேவர்மகன் படத்தில் வருவதுபோல் வேஷ்டி சட்டை அணிந்து உற்சாகமாக குடும்பத்தாரோடு கொண்டாடினார். மேலும் அவர் தன்னுடைய தீபாவளி வாழ்த்துகளை ரசிகர்களுக்கும் அவர் சார்ந்த அரசியல் கட்சிநிர்வாகிகளுக்கும் ட்விட்டர்மூலம் தெரிவித்தார்.

kamal hassan diwali celebration

தீபாவளியன்று தன்னுடைய நண்பரும் டைரக்டருமான சந்தானபாரதி மற்றும் அவரது மகன் சஞ்சய் பாரதி, தன் இளைய மகள் அக்‌ஷராவோடு நடிகர் கமலஹாசன் இவ்வருட தீபாவளிப்பண்டிகையை உற்சாகமாக தனது இல்லத்தில் கொண்டாடினார். கமல் வித்தியாசமான காஸ்ட்யூம் அதாவது அவர் நடிகர் திலகம் சிவாஜிசாரோடு நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் வரும் வேஷ்டி சட்டை கெட்அப்போடு கொண்டாடியதை அவரது ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் கண்டு களித்து கொண்டாடினர்.

நடிகர் கமலஹாசன் தற்போது பிக்பாஸ் 6 வது சீசனில் பிசியாக உள்ளார். மேலும் லைக்கா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவர உள்ள டைரக்டர் சங்கரின் இந்தியன்-2 படப்பிடிப்பிலும் பிசியாக உள்ளார்.

தீபாவளி என்றாலே பண்டிகை கொண்டாட்டம் என்பதை விட எல்லோரிடமும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதன் வலிமை அவரவர்களுக்கே தெரியும். அந்த வகையில் நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் நிறுவனராகவும் உள்ளார். அதோடு தற்போது பிக்பாஸ் 6 சீசனிலும் நடித்து வருகிறார். இது மட்டும் அல்லாமல் டைரக்டர் சங்கர் இயக்கும் இந்தியன்-2 என்ற படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இந்த பிசியான செட்யூலிலும் பண்டிகைகள் என்பது பாரம்பரியமானது அதனை யாரும் கொண்டாடாமல் விட்டு விடக்கூடாது என்ற நோக்கில் தன் மகள் அக்‌ஷராவுடன் சேர்ந்து வீட்டில் கொண்டாடி தன் ரசிகர்களுக்கு தமிழில் சோஷியல் மீடியாவில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது அவருடைய ரசிகர்களுக்கும் கட்சிநிர்வாகிகளுக்கும் புதிய உற்சாகத்தினை தந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

kamal hassan diwali celebration


kamal hassan diwali celebration

பண்டிகை நேரத்தில் தன் தொழிலுக்கு மூத்தவரும் நடிப்பின்இமயம் நடிகர் திலகமாக அனைவராலும் போற்றப்பட்ட நடிப்பு பல்கலைக்கழகம் சிவாஜியோடு நடித்த படத்தினை அவர் நினைவுகூர்ந்தது பெரும் மகிழ்ச்சியினைத் தந்துள்ளது. நடிகர் திலகத்திற்கு கமல் செல்லப்பிள்ளை. சிவாஜிசாரின் குடும்பத்தினரோடு இன்றும் நல்ல நட்பில் உள்ளார் நடிகர் கமல்ஹாசன். அவருடைய போட்டோவினை பதிந்து அதேபோல் கெட்டப்பில் அமர்ந்த நிலையில் தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையோடு காட்சியளித்தது பெரும் சந்தோஷத்தினை அனைவருக்கும் தந்துள்ளது. மேலும் தனது மகளையும் மாடர்ன் ட்ரெஸ் அணியாமல் பாரம்பரிய உடையான புடவை ரவிக்கையில் அருகில் நிறுத்தி போட்டோவை பதிந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. நீதான்யா நிஜத்தமிழன் என ரசிகர்கள் ஆரவார கோஷம் எழுப்பி இதனை வரவேற்றுள்ளனர்.

kamal hassan diwali celebration

இதுபோல்  கோலிவுட்டில்  சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் முன்னனி நடிகர்களான விஜய், அஜீத் , தனுஷ், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட அனைத்து நடிகர் நடிகைகள் தங்களுடைய குடும்பத்தாரோடு  தீபாவளிப்பண்டிகையை கொண்டாடி  சோஷியல் மீடியாவில் பதிந்துள்ளது பாரம்பரிய கலாச்சாரத்தினை இன்று வரை எவரும்  மறக்கவில்லை என்பதையே  காட்டுகிறது. ஆனால்  எதிர்கால சந்ததியினர் இதே நிலையில் இப்பண்டிகைகளையெல்லாம்  கொண்டாடி நம் கலாச்சாரத்தின் பழக்க வழக்கங்களின் வளர்ச்சிக்கும் தொன்மைக்கும் உறுதுணையாக இருப்பார்களா? என்பது ஒரு புறம் கேள்விக்குறியாக இருந்தாலும் நாடு எவ்வளவு டெக்னாலஜியில் முன்னேற்றம் கண்டாலும் அக்காலத்தில் நம் முன்னோர்கள் காட்டிய வழியினை நாம் பின்பற்றவில்லையா? அதேபோல் நம் சந்ததியினரும் இதனை மறக்காமல்  வருடந்தோறும் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கையினை  நாம்  பெற்றுள்ளதால் உலகம் உள்ளவரை நம் பாரம்பரிய பண்டிகைகள் உலகம் முழுக்க கொண்டாடப்படும் என்பதையே இப்பண்டிகைகளும்  கொண்டாட்டங்களும் சுட்டிக்காட்டுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாதுங்கோ...

தனது ரசிகர்களுக்கு நடிகர் கமல் ட்விட்டரில் தெரிவித்த தீபாவளி வாழ்த்து...

எல்லா உயிரும் இன்பமெய்துக. எல்லா உடலும் நோய் தீர்க. எல்லா உணர்வும் ஒன்றாதல் உணர்க. ஒளியினால் இருள் அகல்க. மனங்களில் மகிழ்வு பெருகுக. என் தீபாவளி வாழ்த்து.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News