இறுதி கட்டத்தில் ரோஜா சீரியல்- நாயகன் சிபு சூர்யன், நாயகி பிரியங்கா உருக்கம்

roja serial end date, roja serial last episode, roja serial actor Sibbu Suryan talkஇறுதி கட்டத்தில் ரோஜா சீரியல் இருப்பதால் நாயகன் சிபு சூர்யன், நாயகி பிரியங்கா ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளனர்.

Update: 2022-11-29 07:56 GMT

roja serial end date, roja serial last episode, roja serial actor Sibbu Suryan talkரோஜா சீரியலின் இறுதி கட்ட படிப்பிடிப்பு காட்சியில் ஒன்று.

roja serial end date, roja serial last episode, roja serial actor Sibbu Suryan talkசன் தொலைக்காட்சியில் 'சித்தி' சீரியலுக்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ள ஒரு நெடுந்தொடர் ரோஜா. சித்தி சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது வயது வித்தியாசம் இன்றி சிறியவர் முதல் பெரியவர் வரை பலர் நடிகை ராதிகாவின் நடிப்பிற்கு அடிமையாக இருந்தனர். அதேபோல தற்போது சன் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது ரோஜா என்கிற நெடுந்தொடர் . ரோஜா தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா நல்கரி. கதாநாயகன் சிபு சூர்யன்.

roja serial end date, roja serial last episode, roja serial actor Sibbu Suryan talkபிரியங்கா நல்கரி ஹைதராபாத்தை சேர்ந்தவர். கன்னட நடிகையாக இருந்த இவர் தமிழில் நடித்த முதல் சீரியல் ரோஜா நான்கு வருடங்களுக்கும் மேலாக ரசிகர்கள் கொடுத்த ஆதரவின் காரணமாக சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது. பிரியங்கா நல்கரி என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. சன் டி.வி.ரோஜா என்று சொன்னால் தான் எல்லோருக்கும் தெரியும். அந்த அளவிற்கு பிரியங்கா நல்கரி சிறந்த சீரியல் நடிகையாக இருந்து வருகிறார்.

roja serial end date, roja serial last episode, roja serial actor Sibbu Suryan talkதெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருந்த பிரியங்கா முதல்முறையாக தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு, என்னும் திரைப்படத்தில் அறிமுகம் ஆகி இருந்தார் அதை தொடர்ந்து சம்திங் சம்திங், நானே ராஜா நானே மந்திரி, காஞ்சனா 3 போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். திரைப்படங்களில் சின்ன வேடங்களில் நடத்திக் கொண்டிருந்த பிரியங்கா சன் டிவியில் ரோஜா சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

roja serial end date, roja serial last episode, roja serial actor Sibbu Suryan talkசமீபத்தில் தான் பிரியங்கா நல்கரியின் சகோதரி பாவனா நல்கரி திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. அந்த திருமண விழாவில் பிரியங்கா நல்கரி தன்னை ஒரு மணப்பெண் போல் அலங்கரித்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் போட்டோ சூட் பதிவிட்டு இருந்தார்.

ரோஜா சீரியலின் நாயகி பிரியங்காவுடன் நாயகன் சிபு சூர்யன்.

roja serial end date, roja serial last episode, roja serial actor Sibbu Suryan talkஇப்பொழுது சன் டிவியின் ரோஜா சீரியல் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரியங்கா நல்கிரி தமிழ் ரசிகர்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

roja serial end date, roja serial last episode, roja serial actor Sibbu Suryan talkமுழுமையாக நான்கு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் டி.ஆர்.பி. பட்டியலில் முதல் 10 இடங்களில் ரோஜா தொடர் இடம் பெற்று இருப்பது ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை காட்டுகிறது.

roja serial end date, roja serial last episode, roja serial actor Sibbu Suryan talkஇத்தொடரின் நாயகன் சிபு சூர்யன் அர்ஜுன் என்ற முதன்மை பாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். ரோஜா சீரியல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதையொட்டி சிபு சூர்யன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அழகான பயணம் நூற்றுக்கணக்கான நினைவுகளுடன் அளவு கடந்த அன்பு கடந்த ஆண்டுகள். இன்று என்னுடைய படப்பிடிப்பின் இறுதி நாள். பலராலும் நேசிக்கப்பட்ட அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தை என்னை நம்பி எனக்கு அளித்த சரிகம தயாரிப்பு நிறுவனத்திற்கும், சன் தொலைக்காட்சிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். என் மீதான அன்புக்கும், எனக்களித்த ஆதரவுக்கும் எனது நன்றியும் அன்புகளும் .உங்கள் அன்புக்கு என்றுமே கடமைப்பட்டவனாக இருப்பேன். விரைவில் உங்களை சந்திப்பேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News