அரசியல் ஆட்டம் ஆரம்பிக்கலாங்களா? பிக் பாஸ் வீட்டில் அரசியல்வாதி

Tamil Bigg Boss Vikraman -பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் நேரடி அரசியல்வாதி போட்டியாளராக விசிக செய்தி தொடர்பாளர் விக்ரமன் கலந்து கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Update: 2022-10-10 08:55 GMT

Tamil Bigg Boss Vikraman -மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி நடத்தி வரும் கமல் , தனது அரசியல் கருத்துகளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக பேசி வருவதை பார்த்துள்ளோம்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயும் அரசியல் பேசும் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளார். இதில் கமலின் புதிய திட்டம் ஏதேனும் இருக்குமா? அரசியல் கட்சியுடன் கைகோர்க்க வகுத்துள்ள திட்டத்திற்கு ஒத்திகை பார்க்கத் தானா எனப் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

ரசிகர்களின் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. மீண்டும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல்முறையாக 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 6ல், சென்னையைச் சேர்ந்த பிரபல செய்தி சேனலின் முன்னாள் ஆசிரியர் மற்றும் செய்தியாளர் விக்ரமன் போட்டியாளராக களமிறங்குகிறார். பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னர் விடுதலை சிருத்திகள் கட்சி செய்தித் தொடர்பாளராகச் சேர்ந்தார். விக்ரமன், பெங்களூரில் உள்ள ஸ்கூல் ஆஃப் பாலிசி & கவர்னன்ஸ் நிறுவனத்தில் நெட் ஜீரோ பெல்லோஷிப் பெற்றவர்


இந்த பிக் பாஸ் சீசனில்  GP முத்து (யூட்யூபர்), மணிகண்டா ராஜேஷ் (ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர்), சாந்தி அரவிந்த் (நடன இயக்குனர்), விக்ரமன் (அரசியல்வாதி), , ராபர்ட் (நடன இயக்குனர்), ஷெரினா (மாடல்), ராம் ராமசாமி (மாடல் நடிகர்), அஸீம் (சீரியல் நடிகர்), அசல் கோலார் /வசந்த் (இசைக்கலைஞர்), ஷிவின் கணேசன் (திருநங்கை) விஜெ மகேஷ்வரி (தொகுப்பாளர் / நடிகை), விஜெ கதிரவன் (தொகுப்பாளர்), ஜனனி (இலங்கை செய்தி வாசிப்பாளர்), ஆர்யன் தினேஷ் கனகரத்னம் (இலங்கை, இசைக்கலைஞர்). அமுதாவாணன் (ஸ்டாண்ட் அப் காமெடியன் / நடிகர்), ஆயிஷா (சீரியல் நடிகை), தனலக்ஷ்மி (டிக்டாக்கர், , ரச்சிதா மகாலக்ஷ்மி (சீரியல் நடிகை), குயீன்ஸ் ஸ்டான்லி (வளரும் நடிகை), நிவிஷினி (சிங்கப்பூர் மாடல்) ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்துள்ளனர்.

இவர்களில் முதல் முறையாக அரசியல் தொகுப்பாளர்களில் ஒருவரான விக்ரமன் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக களமிறங்குகிறார்.

தொகுப்பாளராக மட்டுமல்லாமல் தற்போது சமூக நலனில் அக்கறை கொண்ட அரசியல் பிரமுகராகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பேச்சாளராகவும் திகழும் விக்ரமன்.  தனது சிறப்பான அரசியல் பேட்டிகளிலும் பேச்சுக்களாலும் மக்களிடையே கவனத்தை ஈர்த்தவர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் நேரடி அரசியல்வாதி போட்டியாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் விக்ரமன் கலந்து கொண்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாது, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி பிக் பாஸ் வீட்டில் பல்வேறு அரசியல் காட்சிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம். நீங்க ஆட்டத்த ஆரம்பிச்சுடுங்க.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2



Tags:    

Similar News