வரலாறு பட நாயகி கனிகாவின் மகனுக்கு நேர்ந்த சோகம் பற்றி தெரியுமா?

Actress Kaniha -வரலாறு பட கதாநாயகி கனிகாவின் மகனிற்கு நேர்ந்த சோகம் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Update: 2022-09-28 06:37 GMT

நடிகை கனிகா.

Actress Kaniha -தமிழ் திரைப்பட உலகில் கடந்த 2002ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் வெளியான 5 ஸ்டார் படத்தில் நடிகர் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்தவர் கனிகா. தமிழில் எதிரி, ஆட்டோகிராப், வரலாறு ஆகிய படங்களில் நடித்துள்ளார் கனிகா. இவரின் இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Actress Kaniha, Actress Kaniha Son, actress kaniha son health issueகடந்த 2001ம் ஆண்டு மிஸ் சென்னை அழகிப்போட்டியில் இரண்டாவது ரன்னராக வந்த கனிகா, பைவ் ஸ்டார் படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். நடிகையாக மட்டுமில்லாமல், ஜெனிலியா, ஷ்ரேயா போன்ற முன்னணி ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞராகவும் இருந்தார்.


நடிகர் ஷ்யாம் என்பவரை திருமணம் செய்து கொண்டு சில காலம் படங்களிலிருந்து விலகியிருந்தார். இந்த தம்பதிக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார்.சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கும் கனிகா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன் குறித்து சோகமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Actress Kaniha, Actress Kaniha Son, actress kaniha son health issueஅதில், எனது மகன் பிறந்தவுடன் என்னிடம் காட்டவில்லை. பிறந்தவுடனே அவனுக்கு இதயத்தில் பிரச்சனை இருந்தது. அதனால் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மகனை பார்த்தவுடன், எனது மனம் இரண்டாய் உடைந்தது. பின்னர் இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு ஆபரேஷன் செய்தனர். 7 மணி நேரம் ஆப்ரேஷன் நடந்தது, என் மகனை பிழைக்க வைத்துவிட்டார்கள்.

அது மிகவும் கடுமையான தருணம். அதன் பிறகே பிறகு என் மகன் நலமுடன் இருக்கிறான் என்று தனது மகன் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் கனிகா. அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. கூறியுள்ளார். கனிகா தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரில் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News