சோஷியல் மீடியாவிலும் முத்திரை பதிக்கும் விருமன் பட நடிகை அதிதி ஷங்கர்..!

'விருமன்' நாயகி அதிதி ஷங்கர் படத்தில் துறுதுறு கேரக்டரில் நடித்ததைப் போலவே, சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார்.

Update: 2022-09-28 08:50 GMT

நடிகை அதிதி சங்கர்.

நடிகர் கார்த்திக்கின்  ஜோடியாக 'விருமன்' படத்தில் நாயகியாக அறிமுகமான பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், தனது, தன்னம்பிக்கையான நடிப்பு மற்றும் சிறந்த நடனத் திறனால் பார்வையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் அனைவரையும் ஒரே மாதிரியாகக் கவர்ந்துள்ளார்.

'விருமன்' படத்தில் அவர் சொந்தக் குரலில் பாடிய 'மதுரை வீரன்' என்ற பாடல் தற்போழுது டிரெண்டிடாகி உள்ளது. அப்பாடலை யுவனுடன் சேர்ந்து அதிதி ஷங்கர் பாடியுள்ளார். அடுத்ததாக முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தில் நாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும், படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இரண்டாவது படத்திலேயே அவர், 25 இலட்சம் சம்பளமாக வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் அதிதி ஷங்கர், அண்மையில் விளம்பரங்களிலும் காலூன்றத் தொடங்கியிருக்கிறார். அதன்படி ஆடை விளம்பரத்தில் அதிதி நடிகை ராதிகாவுடன் நடித்திருக்கிறார். இந்தநிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அதிதி அவ்வப்போது தனது மாடல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது, அவர் வெளியிட்டிருக்கும், லேட்டஸ்ட் போட்டோஷூட் படங்கள் ரசிகர்களிடையேயும் சோஷியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News