அறிமுக தமிழ் நடிகருக்கு ஜோடி சேரும் 3 கலர்புல் கதாநாயகிகள்

Nitham Oru Vaanam-நித்தம் ஒரு வானம் படத்தில் அறிமுக தமிழ் நடிகருக்கு 3 கலர்புல் கதாநாயகிகள் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனர்.

Update: 2022-09-15 07:34 GMT
ஒரே படத்தில் தமிழ் நடிகருக்கு  ஜோடி சேரும் 3 கதாநாயகிகள்

Nitham Oru Vaanam- பாலிவுட்டில் மிகப் பெரிய படங்களை தயாரித்த Viacom18 studios, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்கு பிறகு தென்னிந்தியாவில் நேரடியாக தயாரிக்கும் திரைப்படம் "நித்தம் ஒரு வானம்". இந்த படம் தெலுங்கில் "ஆகாஷம்"என பெயரிடப்பட்டுள்ளது. Rise East Entertainment நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் Ra.கார்த்திக் இயக்கியுள்ளார்.


nitham oru vaanam movie cast, Ra. Karthik, Ashok Selvan, Ritu Varma, Aparna Balamurali, Shivathmika Rajashekarஅசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. நடிகை ரீது வர்மா, சுபா எனும் கதாபாத்திரத்திலும், அபர்ணா பாலமுரளி, மதி எனும் கதாபாத்திரத்திலும், ஷிவாத்மிகா மீனாக்ஷி எனும் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். வண்ணமயமான கேரக்டர் போஸ்டருடன் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி இருக்கும் இப்படம், சென்னை, குலுமனாலி, சிக்கிம், கோவா, டெல்லி, சண்டிகர், கொல்கத்தா, விசாகப்பட்டினம், ஹைதராபாத், மதுரை, பொள்ளாச்சி என இந்தியாவின் பல்வேறு அழகான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

nitham oru vaanam movie cast, Ra. Karthik, Ashok Selvan, Ritu Varma, Aparna Balamurali, Shivathmika Rajashekarஇப்படத்துக்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்க, விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல எடிட்டர் ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். படத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News