/* */

தொழிலாளர் நல வாரிய இணையதளம் முடக்கம்: சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்த முடிவு

தொழிலாளர் நல வாரிய இணையதளம் முடக்கத்தை சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தொழிலாளர் நல வாரிய இணையதளம் முடக்கம்: சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்த முடிவு
X

நாமக்கல்லில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டத்தில் அதன் மாநில தலைவர் கதிர்வேல் பேசினார்.

தமிழகத்தில், தொழிலாளர் நல வாரிய இணையதளம் செயல்படாமல் உள்ளதால், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அதை சீரமைக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்மாநில கடல் மீன்கள் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்றப் பொது நலச் சங்கத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சேந்தமங்கலத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில கூட்டமைப்பு தலைவர் சேலம் கதிர்வேல் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, சங்க கொடி ஏற்றி வைத்து பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்: .

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் வழங்குவது போல தமிழ்நாட்டிலும் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலைப்பளுவை கருத்தில் கொண்டு ஆண்களுக்கு 58 வயதிலும், பெண்களுக்கு 55 வயதிலும் ஓய்வூதிய உத்தரவு வழங்கி நிதி உதவி வழங்க வேண்டும்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்குவது போல அமைப்பு சாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். பொது இ-சேவை மையத்திற்கு பாஸ்வேர்டு வழங்குவது போல் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழில் சங்கங்கள் பதிவு செய்வதற்கு வெப்சைட்டில் லாக் ஆவதற்கு, பாஸ்வேர்டு மற்றும் விரல் ரேகை வைக்க அனுமதிக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்டும் திட்டத்திற்கு உடனடியாக நிதி உதவி ரூ. 4.50 லட்சம் வழங்க, வரும் நிதி ஆண்டில் ஆவண செய்ய வேண்டும். பதிவு புதுப்பித்தல், ஓய்வூதியம் போன்ற விண்ணப்பத்திற்கு தொழிற்சங்கம் பரிந்துரை செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழ் மாநில கடல் மீன்கள் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற பொது நல சங்கத்தின் மாநிலத் தலைவர் கதிர்வேல் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தொழிலாளர் பதிவுக்கான வெப்சைட் முடக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பதிவு புதுப்பித்தல், உதவித்தொகை பெறுவது, கேட்பு மனு அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாரியம் முழுமையாக ஸ்தம்பிக்கும் நிலையில் உள்ளது. இதை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும், குறித்த காலத்தில் தொழிலாளர்கள் விவரங்களை சரி செய்து தந்து விடுகிறோம் என நீதிமன்றத்தில் உத்திரவாதம் தெரிவித்த போதிலும், வெப்சைட்முறையாக செயல்படவில்லை.

இந்த வாரியத்தில் 72 லட்சம் பேரின் தரவுகள் காணவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் 43 லட்சம் பேரின் தரவுகள் மட்டுமே காணாமல் போய் உள்ளதாக கோர்ட்டில் அரசு கூறியுள்ளது. எனவே தரவுகளை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். தொழிலாளர் பதிவிற்கு விஏஓ பரிந்துரை அவசியம் என்பதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கை விரல் ரேகை மட்டுமே வைத்து தொழிலாளர் பதிவை மேற்கொள்ள வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ. 20 ஆயிரம் திருமண உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ. 6 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே பாகுபாடின்றி அனைத்து 18 நலவாரிய தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான உதவித்தொகை வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ. 1,200ல் இருந்து ரூ. 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். தொழிலாளர் நல வாரிய வெப்சைட் உடனடியாக சீர் செய்யாவிட்டால், தேர்தல் முடிவுக்கு பிறகு மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் தமிழ் மாநில கடல் மீன்கள் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற பொது நல சங்கத்தின் மாநில செயலாளர் மோகன்ராஜ், பொதுச் செயலாளர் ராம்கவுண்டர், தொழிற்சங்க மாநில மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், தமிழ் மாநில கடல் மீன்கள் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற பொது நல சங்க நிர்வாகி பரமசிவம் நன்றி கூறினார்.

Updated On: 25 May 2024 1:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. உலகம்
    இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
  3. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
  5. தமிழ்நாடு
    ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
  6. லைஃப்ஸ்டைல்
    மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
  7. லைஃப்ஸ்டைல்
    போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா