ஆண்டுக்கு ஒரு முறை அண்ணாமலையாரை சூரியன் தரிசனம் செய்யும் அதிசய நிகழ்வு

தமிழ் புத்தாண்டில் திருநேர் அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை அண்ணாமலையாரை சூரியன் தரிசனம் செய்யும் அதிசய நிகழ்வு நடைபெற்றது.

Update: 2023-04-14 18:00 GMT

பைல் படம்.

ஒவ்வொரு தமிழ் புத்தாண்டிலும் அதிசய நிகழ்வாக, திருநேர் அண்ணாமலையார் கோயிலில் காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழும். இந்த நிகழ்வை , சூரியன் சிவ லிங்கத்தினை புத்தாண்டு அன்று தரிசனம் செய்யும் நிகழ்வாக கருதுவார்கள். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் இந்த அரிய நிகழ்வை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மேலும், இந்த நிகழ்வையொட்டி இன்று அதிகாலையில் திருநேர் அண்ணாமலையார் கோயில் திறக்கப்பட்டு , அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மல்லி, தாமரை பூ உள்ளிட்ட பல்வேறு வண்ணபூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. வருடத்திற்கு ஒரு முறை நிகழும் இந்த நிகழ்வையும், திருநேர் அண்ணாமலையாரின் தரிசனத்தையும் ஏராளாமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News