போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திருத்தணி அருகே காதல் என்ற பெயரில் பள்ளி மாணவியை பாலியல் வன்புணர்வு. வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

Update: 2023-07-05 05:45 GMT

போக்சோவில் கைதான காவேரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த யுகேந்திரன் என்கின்ற விக்கி

திருத்தணி அருகே காதல் என்ற  பெயரில் பள்ளி மாணவியை பாலியல் வன்புணர்வு. வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது. செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியம், ராமாபுரம் பகுதியை சேர்ந்த 15 வயதான பிளஸ் 1 படித்து வரும் காவேரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த யுகேந்திரன் என்கின்ற விக்கி (22) என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி கடந்த மாதம் வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் யுகேந்திரன் மீது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த இருவரையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் உட்படுத்தினர்.

மருத்துவ பரிசோதனை முடிவில் யுகேந்திரன் மாணவியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து கனகம்மாசத்திரம் போலீஸ் நிலைய ஆய்வாளர் அண்ணாதுரை பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட யுகேந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.


Tags:    

Similar News