இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது
திருத்தணி பல்வேறு பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருத்தணியில் தொடர் இருசக்கர வாகனத்தை விட்டு ஈடுபட்டு வந்த நபர் போலீசார கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகரத்தில் கடந்த சில நாட்களாக பட்டப்பகல் மற்றும் இரவு நேரத்தில் வீடுகள் முன்பு நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று வந்தனர். பாதிக்கப் பட்டவர்கள் திருத்தணி போலீசில் புகார் கொடுத்து வந்தனர்.
அந்த வகையில், திருத்தணி மேட்டுத் தெரு சேர்ந்த பெருமாள், சித்துார் ரோடு, ஹோமத்திரி மற்றும் பழைய தர்மராஜா கோவில் தெரு நாகராஜ் ஆகிய மூவரின் பல்சர் இரு சக்கர வாகனங்கள் கடந்த மூன்று நாட்களுக்கு முன் மர்ம நபரால் திருடப்பட்டு வந்தது. பழைய தர்மராஜா கோவில் தெருவில் வாகனம் திருடும் போது, மர்ம நபரின் முகம் மற்றும் அடையாளம் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து மேற்கண்ட மூவரும் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர்.
இந்நிலையில் மாலையில் திருத்தணி காவல் உதவி ஆய்வாளர் ராக்கிகுமாரி பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனம் திருடிய வாலிபர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மேற்கண்ட மூவரின் இரு சக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக் கொண்டார். பின்னர், அவரிடமிருந்த மூன்று வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் வாகனங்கள் திருடியவர் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் கணபதி முதலியார் தெருவில் வசிக்கும் சபீர் மகன் இம்ரான்(35) எனத் தெரிய வந்தது. இம்ரானை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.