மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் திட்டத்தை மு.க. ஸ்டாலின் துவக்கினார்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள 58 ஆயிரத்து 463 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 மகளிர் சுய உதவி உறுப்பினர்களுக்கு ரூ.2749 கோடி 85 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தொடங்கி வைத்தார் .
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 52 ஆயிரத்து 574 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 6 லட்சத்து 83 ஆயிரத்து 462 பயனாளிகளுக்கு தேசியமமாக்கப்பட்ட வங்கிகள் ,கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2 ஆயிரத்து 485 கோடியே 96 லட்சம் வங்கி கடன் மற்றும் 30 இ- சேவை மையங்கள் துவக்கி வைத்து 30 பயனாளிகளுக்கு உரிமம் வழங்கினார் .
அதேபோன்று சுயதொழில் தொடங்க தொழில் கடனாக நகர்ப்புற பகுதியைச் சேர்ந்த 931 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 26 கோடி 60 லட்சமும்.1381 தனிநபர்களுக்கு 16 கோடியே 9 லட்சமும்,4 ஆயிரத்து 702 நகர்ப்புற சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 57 ஆயிரத்து 451 பயனாளிகளுக்கு தொழில் துவங்கிட வங்கி கடனாக 219 கோடியே 37 லட்சமும் ஊரகப் புத்தாக்க திட்டத்தின்கீழ் ஊரகப் பகுதிகளில் பாரம்பரிய மற்றும் அதிக வருமானம் தரும் தொழில்களில் திறன் அனுபவம் வாய்ந்த நபர்களை கொண்டு இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பினை பெற்று தர முதல்கட்டமாக 69 சமுதாயத் திறன் பள்ளிகள் தொடங்க 66 லட்சம் மற்றும் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பில் உள்ள திறன் இடைவெளியை கண்டறிந்து,தேவையான தொழில்நுட்ப பயிற்சிகளும் உற்பத்தி செலவினைக் குறைத்து.வருமானத்தை பெருக்கிடும் பயிற்சிகளும் வழங்க 37 சமுதாய பண்ணை பள்ளிகள் துவங்க 26 லட்சம் உற்பத்தியாளர் குழுக்களுக்கான துவக்க நிதியாக 90 குழுக்களுக்கு 68 லட்சம் மற்றும் தொழில் குழுக்களுக்கான துவக்க நிதியாக 37 குழுக்களுக்கு 26 லட்சம் வழங்கப்பட்டது .
இந்நிகழ்ச்சியை இதர மாவட்டங்களில் காணொலி காட்சி மூலமாக கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
முன்னதாக மு.க.ஸ்டாலின் அவரது பண்ணை வீட்டில் இருந்து புறப்பட்டு திருத்தணி ஜி. ஆர். டி. கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சிக்கு வந்தபோது வாழை மரத் தோரணங்கள் , பழங்களால், பலூன்களால் ஆன வளைவுகள், வரவேற்பு பேனர் வைத்து தி.மு.க.வினர் திருத்தணி வரை உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு .நாசர். தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரன் வி.ஜி. ராஜேந்திரன், டி.ஜே. கோவிந்தராஜன் தி.மு.க. மாவட்ட செயலாளர் பூபதி அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.