திருத்தணியில் திருநங்கைகள் டி.எஸ்.பி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம்

திருத்தணியில் திருநங்கைகள் போலீஸ் டிஎஸ்பி அலுவலகம் எதிரே ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-21 15:34 GMT

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை அருகே உள்ள குட்கிராமத்தை சேர்ந்தவர் திருநங்கை செவ்வந்தி.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய உறவினர் சீமந்த நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார் இதற்காக அவர் திருத்தணியில் இருந்து போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார்.

திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை சாலையில் உள்ள தெக்கலூர் நந்தி ஆற்று பாலத்தின் அருகே செவ்வந்தியை வண்டியிலிருந்து இறங்கி அவரை கட்டாயப்படுத்தி கத்தியை காட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செவ்வந்தியை அடித்து உதைத்து அவரிடம் இருந்த நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட செவ்வந்தி திருத்தணி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

ஆனால் காவல்துறையினர் புகாரை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் பின்னர் திருநங்கைகள் தாங்களாகவே விசாரணையில் இறங்கி திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்று,

அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளியை அடையாளம் தெரிந்து கொண்டு அவரை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

அதற்கும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் திருத்தணி சித்தூர் சாலையில் உள்ள திருப்பதி டிஎஸ்பி அலுவலகம் அருகே 10 பேர் கொண்ட திருநங்கைகள் தங்களுடைய ஆடைகளை களைந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

இதன் பின்னர் உடனடியாக டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனே அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட திருநங்கைகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். நகரின் முக்கிய சாலையில் திருநங்கைகள் திடீரென ஆடைகளை களைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News