திருத்தணி:மதுக்கடைகளில் கூட்டம் கூட்டமாக குவிந்த மது பிரியர்கள்..!

தொற்று பரவும் அபாயத்தை கண்டுகொள்ளாமல் மதுபாட்டில்களை வாங்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-05-08 15:35 GMT

திருத்தணி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு கூட்டம் கூட்டமாக மதுக் கடைகளில் குவிந்த மது பிரியர்கள்; தொற்று பரவும் அபாயத்தை கண்டுகொள்ளாமல் மதுபாட்டில்களை வாங்கி குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசு வருகின்ற 10.5.2021 திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் வருகிற 24ம் தேதி காலை 4 மணிவரை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசு அறிவித்த ஊரடங்கின் போது அரசு டாஸ்மார்க் கடைகளும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஞாயிற்றுக்கிழமையான நாளை கடை இருக்குமோ என இருக்காதோ என, இன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வற்காக அரசு விதித்த கட்டுப்பாடுகளான முக கவசம் அணிவது, சமூக விலகலை கடைப்பிடிப்பது போன்ற எந்த விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் முற்றிலும் காற்றில் பறக்கவிட்டு மதுபாட்டில்களை அதிக அளவில் வாங்கி சென்றதால் தொற்று அதிக அளவில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News