கழிவறை அருகே அடையாளம் தெரியாத நோயாளி படுத்து தூங்கிய அவலம்!
திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் கழிவறை அருகே படுத்து தூங்கிய அவல நிலை பரபரப்பை ஏற்படுத்தியது.
திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த அடையாளம் தெரியாத நோயாளி ஒருவர் இரவில் கழிவறை வெளியில் தரையில் படுத்திருக்கும் அவலம்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதேபோல் உள்நோயாளிகள் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த முகவரி இன்றி அடையாளம் தெரியாத நோயாளி ஒருவர் இரவில் கழிவறைக்கு வெளியில் தரையில் படுத்துக் கொண்டிருப்பதை பார்த்து நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.எனவே கழுவறை வெளியில் படுத்திருக்கும் அடையாளம் தெரியாத நோயாளிக்கு முறையாக சிகிச்சை அளித்து. பின்னர் இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று விசாரணை செய்து. உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உறவினர்கள் தெரிவிக்கையில் அரசு மருத்துவமனைகளில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் பல்வேறு பரிசோதனைகளை செய்ய வேண்டும் என அவர்களை மீண்டும் மீண்டும் அலை கடிக்கும் காரணத்தினால் உள்ளூர் நோயாளிகள் வீடுகளுக்கு சென்று மறுநாள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். வசதி இல்லாத வெளியூர் நோயாளிகள் வேறு வழியின்றி சாலை ஓரங்களிலும், இதுபோன்று கழிவறை பகுதிகளில் படுத்து தூங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.இது மட்டுமின்றி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாவட்டம் முழுவதிலிருந்தும் மேல் சிகிச்சைக்காக அதிக அளவில் வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை நேரத்திற்கு அளிக்கப்படுவதில்லை என்றும்,முக்கியமாக இந்த மருத்துவமனையில் இருதய நோய்க்கு தேவையான உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் சிகிச்சை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை சென்னை அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்வதாகவும், பண வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்கின்றனர். வசதி இல்லாதவர்கள் வேறு வழி இன்றி நாள் கணக்கில் சுற்றித்திரிந்து சிகிச்சை பெற்று வருவதாக புலம்புகின்றனர் எனவே அரசு மருத்துவமனைகளில் வரும் நோயாளிகளுக்கு காலதாமதம் செய்யாமல் தேவையற்ற சிகிச்சை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பு மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.