சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிய ஊராட்சி மன்ற தலைவருக்கு அபராதம்.

பள்ளிப்பட்டு அருகே சாலை அமைப்பதற்காக சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிய பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு அபராதம் விதிப்பு

Update: 2023-12-14 11:00 GMT

பைல் படம்

பள்ளிப்பட்டு அருகே சட்ட விரோதமாக கிராவல் மண் பயன்ப்படுத்தியதாக வருவாய் கோட்டாட்சியர் ஆய்வில் உறுதி செய்து அத்திமாஞ்சேரி ஊராட்சி மன்ற பெண் தலைவருக்கு வருவாய் கோட்டாட்சியர் விதித்த ரூ.12.28 லட்சம் அபராதத் தொகையை செலுத்த காலதாமதப்படுத்தியதால், அபராதத் தொகையுடன் 24 சதவீதம் வட்டி சேர்த்து செலுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியம் அத்திமாஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவராக ஜான்சி பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்க கர்லம்பாக்கம் மலைப் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக கிராவல் மண் எடுத்து சாலை அமைத்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் அப்போதைய வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்தபோது கிராவல் மண் அனுமதியின்றி எடடுத்து பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டதால், ஊராட்சி மன்ற தலைவர் ரூ. 12.28 லட்சம் அபராதம் செலுத்த  வேண்டுமென உத்தரவிட்டார்.

பள்ளிப்பட்டு வட்டாட்சியர் மூலம் அபராதத் தொகையை அரசுக்கு செலுத்த இரண்டு முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. எனினும் அவர் அபராதச் தொகை செலுத்தவில்லையாம். இந்நிலையில் கிராவல் மண் முறைகேடாக பயன்படுத்திய ஊராட்சி மன்றத் தலைவர் ஜான்சி, கோட்டாட்சியர் விதித்த அபராதத் தொகையுடன் 24 சதவீதம் வட்டி அரசு கணக்கில் செலுத்த வேண்டும் என்று  மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.




Tags:    

Similar News