திருத்தணி கிளை சிறையில் மாநில மனித உரிமை தலைவர் கண்ணதாசன் திடீர் ஆய்வு
இந்தக் கிளை சிறையில் 38 பேர் வரை கிளை சிறையில் அடைக்கப்படலாம் ஆனால் 14 பேர் மட்டுமே உள்ளனர்
திருத்தணி கிளை சிறையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை தலைவர் வி கண்ணதாசன் திடீர் ஆய்வு செய்து கைதிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கிளை சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் வி. கண்ணதாசன் இந்த ஆய்வின் போது சிறையில் உள்ள 14 கைதிகளிடமும் குறைகளை கேட்டு கேட்டறிந்தார்.
மேலும் சிறையில் உள்ள கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாக இருக்கின்றதா என அதன் குறித்து ஆய்வு செய்து வேறு ஏதாவது குறைகள் உள்ளதா என்று கிளை சிறையில் கைதிகள் பாதுகாப்பு போன்றவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் வி. கண்ணதாசன் பேசியதாவது: தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் சார்பில் மாநிலத்தில் உள்ள மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிளைச் சிறையில் போன்றவற்றை ஆய்வு மேற்கொள்வது வழக்கம்,அதன் அடிப்படையில் திருத்தணியில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது,
இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு அவர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகள் வழங்கப்படுகிறதா அல்லது காவல்துறையால் அவர்கள் தாக்கப்படுகிறார்களா அல்லது வன்கொடுமை செய்யப்படுகிறார்களா என்று சிறைக் கைதிகளிடம் கேட்கப்பட்ட போது, அப்படி எதுவும் இந்த சிறையில் நடக்கவில்லை என்று கூறியுள்ளார்கள்.மேலும் கிளை சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாக வழங்கப்படுகிறது,
சமீபத்தில் கள்ளச் சாராயத்தால் ஏற்படும் பிரச்னைகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு, அதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர். காவல்துறையினர் இதில் கைது செய்யப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதை விவரங்களை கேட்டறிந்தேன்.மேலும் கிளை சிறையில் உள்ள கைதிகளுக்கு சட்ட உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி மூலமாக வழங்கப்படுவதை உறுதி செய்தேன்.மேலும் இந்த கிளை சிறையில் 14 கைதிகள் மட்டுமே உள்ளனர்.
இந்த கிளை சிறையில் 38 பேர் வரை கிளை சிறையில் அடைக்கப்படலாம் ஆனால் 14 பேர் மட்டுமே உள்ளனர் அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாத வகையில் கட்டிடங்கள் அனைத்தும் தரமாக உள்ளது.மேலும் இந்த கிளை சிறையில் சில கட்டடங்கள் பாதுகாப்பாக இல்லை. அந்த கட்டிடங்கள் தற்போது பயன்பாட்டில் இல்லை. மேலும் கைதிகள் வைக்கப்பட்டுள்ள கிளைச் சிறை பாதுகாப்பாக உள்ளது. அந்த கட்டிடங்கள் எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் உள்ளது,
செங்கல்பட்டு - விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயத்தால் நேர்ந்துள்ள மரணத்தில் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு மாநில மனித உரிமை ஆணையர் என்ற அடிப்படையில் அந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.மீண்டும் இதுபோல் சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று இவ்வாறு அவர் பேசினார்.