ஆந்திராவுக்கு கடத்த இருந்து சந்தன மரம் பறிமுதல் : 3 பேர் கைது..!
ஆர்.கே.பேட்டை அருகே சந்தன மரம் வெட்டி ஆந்திராவிற்கு விற்பனைக்கு அனுப்ப முயன்ற மூன்று பேர் கைது கைது செய்யப்பட்டார்.;
ஆர்.கே.பேட்டை அருகே சந்தன வேணுகோபாலபுரம் காப்பு காட்டில் சந்தன மரம் வெட்டி ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 3- பேரை கைது சந்தன மரம் கட்டை -10 கிலோ பறிமுதல் செய்துள்ள வனத்துறை அதிகாரிகள்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை தாலுக்கா, சந்தன வேணுகோபாலபுரம் ஊராட்சியில் உள்ள காப்பு காட்டில் சந்தன மரங்கள் வெட்டப்படுவதாக ஆந்திராவிற்கு கடத்தப்படுவதாக ரகசிய தகவலை திருவள்ளூர் மாவட்ட வன அலுவலர் சுபாறாவிற்கு கிடைத்தது.
இதனை அடுத்து அவரது தகவலின் அடிப்படையில் வன சரகர் அலுவலர்கள் விஜய சாரதி , அருள்நாதன்,
வனக்காப்பாளர் நடராஜன், வானவர் கிருஷ்ணன், ஆகியோர்கள் கொண்ட வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்பொழுது வனத்துறை அதிகாரிகள் வருவதை கண்டவுடன் ஒருவர் தப்பி சென்று உள்ளார்.
இதில் மூன்று பேர் வனத்துறை அதிகாரிகள் பிடித்து அவர்களிடம் இருந்து 10.கிலோ சந்தன மர கட்டைகள், இந்த மரம் 10 வருடம் பழமையான மரமாகும், இதைப் பறிமுதல் செய்தும், மேலும் கட்டை வெட்ட பயன்படுத்திய கத்தி, ரம்பம்- 5 ஆகிய ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்,வனத்துறை அதிகாரிகள் மேலும் திருத்தணி, எல்.என். கண்டிகை சேர்ந்த கணேசன், திருத்தணி அடுத்த வி கே ஆர் புரம் பகுதியை சேர்ந்த ரவி, ஆந்திர மாநிலம் முத்துறையைச் சேர்ந்த ஏழுமலை, ஆகியோரை கைது செய்தனர்.
ராசுக்குட்டி என்பவர் தப்பிச் சென்றார். மேற்கண்ட மூவரையும் விசாரணை செய்ததில் சந்தன மரத்தை வெட்டி எடுத்து ஆந்திர மாநிலத்தில் விற்பனை செய்ய இவர்கள் ஏஜென்ட் மூலமாக முயற்சி செய்ததை வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. மேற்கண்ட மூவரையும் கைது செய்துள்ளனர்.
தப்பி ஓடிய ராசுகுட்டி என்பவரை தேடி வருவதாக திருத்தணி வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.