ராகுல் காந்தி பிறந்த நாள் : திருத்தணி முருகன் கோவிலில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழாவையொட்டி திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் திருத்தணியில் தங்கத்தேர் இழுத்து முருகனை வழிபாடு செய்தனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா முன்னிட்டு திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சோளிங்கர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் தங்கத்தேர் இழுக்கப்பட்டு சாமி தரிசனம் செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் ஏ. ஜி. சிதம்பரம் தலைமையில் சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டது.
அதையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி ஊர்வலம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வள்ளி, தெய்வனை அம்மன் சமேத உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மேள தாளங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து சிறப்பு வழிபாடுகளை செய்தனர்.
திருக்கோயில் அர்ச்சகர்கள் மகா தீபாராதனை பூஜைகளை செய்தனர். பின்னர் சோளிங்கர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். முனிரத்தினம் மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மலைக்கோயில் மாட வீதிவழியாக தங்கத்தேர் இழுத்து முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டனர்.