மருத்துவர்கள் செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி..!
திருத்தணி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் இல்லாததால் தூய்மை பணியாளர்கள் செவிலியர்களாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது.;
போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத காரணத்தினால் சிகிச்சை பெறுவரும் நோயாளிகள் உள் நோயாளிகள் அவதி. தூய்மை பணியாளர்கள் மருத்துவர்களாகவும் செவிலியர்களாகவும் மாறி சிகிச்சை அளிக்கும் அவலம் திருத்தணி மருத்துவமனையில் நீடித்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு பொது மருத்துவமனை1978 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக₹58 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு தலைமை மருத்துவமனையாக உருவெடுத்து செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனைக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நாள்தோறும் காய்ச்சல், சளி, இருமல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இது மட்டுமல்லாமல் உள் நோயாளிகளாக சுமார் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் 25க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 10 மருத்துவர்கள் குறைந்த செவிலியர்களோடு செயல்பட்டு வரும் நிலையில். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் விபத்து அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் மிகவும் இன்னலுக்கு ஆளாகி வருவதோடு அங்கு பணி செய்யும் தூய்மை பணியாளர்கள் உள்நோயாளிகளுக்கு ட்ரிப்ஸ் ஏற்றியும், ஊசி போடும் அவல நிலையும் உருவாகியுள்ளது.
இதனால் நோயாளிகள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையும் உருவாகி உள்ளது. இந்த நிலையை நோயாளிகள் சிலர் வீடியோக்களை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாகி வருகின்றது. இப்படி நோயாளிகளின் உயிரோடு விளையாடும் இந்த திருத்தணி மருத்துவமனை நிர்வாகத்தின் மீது தமிழ்நாடு முதலமைச்சர் கண்டு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.