திருத்தணி : தவ்ஹீத் ஜமாத் சார்பில் இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா
திருத்தணி அருகே இலவச மரக்கன்றுகள் மற்றும் ரத்த சேகரிப்பு முகாம் தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்றது.;
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி காமராஜர் சிலை அருகே 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்று வினியோகம் மற்றும் இரத்த சேகரிப்பு முகாம் தவ்ஹீத் ஜமாத் கட்சி சார்பில் நடைபெற்றது.
திருத்தணி காவல் ஆய்வாளர் இலவச மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இதில் சுமார் 150 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. ரத்த கொடையாளர்கள் சேகரிப்பு முகாமில் 18 கொடையாளர்கள் தங்களது பெயரை பதிவு செய்தனர்.
மேலும் பொதுமக்களுக்கு 400 பிரதிகள் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் இப்ராஹிம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் சாகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.