பள்ளி மாணவிகளுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டி : எம் எல் ஏ.சந்திரன் வழங்கினார
திருத்தணியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் வழங்கினார்,
திருத்தணியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் வழங்கினார்,
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகாவில் உள்ள பூனிமங்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளி, மத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி நகராட்சி டாக்டர். இராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆகிய பள்ளிகளில் பயின்றுவரும் மாணவர்களுக்கு திருவள்ளூர் மேற்கு தி.மு.க மாவட்ட செயலாளரும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சந்திரன், அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசினார்.
ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் நமது முதல்வர் ஒவ்வொரு திட்டத்தையும் தீட்டி வருவதாகவும், கல்விக்கு முதலிடம் கொடுத்து ஏழை மாணவர்கள் வாழ்வில் உயர வேண்டும் என்ற நல் எண்ணத்தில் படிக்கின்ற பெண் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை, பசியோடு பள்ளிக்கு வந்து படிக்கின்ற மாணவர்கள் சிரமப்படக்கூடாது என்று காலை சிற்றுண்டித் திட்டம், அதேபோல் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகள் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் ஸ்மார்ட் வகுப்பறைகள் என ஒன்றல்ல இரண்டல்ல எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக அயராமல் உழைப்பவர் நம் முதலமைச்சர்' இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் கூலூர் ராஜேந்திரன், ஆர்த்தி ரவி, கிருஷ்ணன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர், கிரண், பள்ளிப்பட்டு பேரூராட்சி செயலாளர் ஜோதி குமார், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.