திருத்தணி முருகன் கோவிலில் அபிஷேகம் சேவை கட்டணம் உயர்த்த முடிவு

திருத்தணி முருகன் கோயிலில் 9 ஆண்டுகளுக்கு பிறகு அபிஷேகம் சேவை கட்டணம் உயர்த்த திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Update: 2022-09-18 03:00 GMT

திருத்தணி முருகன்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் 9 ஆண்டுகளுக்கு பிறகு அபிஷேகம் சேவை கட்டணம் உயர்த்த திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

முருகப்பெருமானின் ஐந்தாம் ப்டை வீடாக போற்றப்படும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை வழப்பட்டு செல்கின்றனர்.

பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மூலவருக்கு பஞ்சாமிருதம், சந்தனகாப்பு, தங்க, வெள்ளி கிரீடம் அணிவித்தல், உற்சவர் திருக்கல்யாணம், வெள்ளி மயில் வாகனம், தங்கத்தேர் உட்பட பல்வேறு சேவைகளுக்கு அதற்கான கட்டணம் செலுத்தி பக்தர்கள் பங்கேற்று வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர்.

இச் சேவைகளில் கட்டண மாற்றமின்றி 9 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இந் நியையில், அபிஷேக பூஜைக்கு பயன்ப்படுத்தப்படும் மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்து திருக்கோயிலுக்கு கூடுதல் பாரம் ஏற்படுவதால், அபிஷேக சேவை கட்டணத்தை உயர்த்த திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக பக்தர்களிடம் கருத்து தெரிவ்க்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வரும் 25ம் தேதி வரை பொதுமக்கள் அபிஷேகம் சேவை கட்டணம் உயர்வு தொடர்பாக ஆலோசனைகள், ஆட்சேபனை தொடர்பாக திருக்கோயில் பிரதான அலுவலகத்தில் கடிதம் மூலமாகவோ அல்லது நேரடியாக வழங்கலாம் என்றும் www.tiruttanimurugan@gmail.com என்ற இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம் என்று திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News