திமுக மாவட்ட பொறுப்பாளரிடம் வாழ்த்துப் பெற்ற, குத்துச்சண்டை வீரர்கள்

குத்துசண்டை போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள், மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பூபதியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.;

Update: 2021-09-02 16:10 GMT

பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீரர்களை பாராட்டிய திமுக மாவட்ட பொறுப்பாளர் பூபதி

தேசிய அளவில் கோவாவில் நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் தமிழகத்தின் சார்பில் 65 நபர்கள் கலந்து கொண்டனர். திருத்தணியை சார்ந்த எம் .ராகுல் வெள்ளி பதக்கம் மற்றும் பிரபு குமார் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

இவர்கள் இருவரும் இன்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம். பூபதியை சந்தித்தனர். அப்போது திமுக மாவட்ட பொறுப்பாளர் பூபதி இருவருக்கும் வாழ்த்து கூறினார்.

இந்த நிகழ்ச்சியில்  பயிற்சியாளர் மோகன்ராஜ், வெங்கடேசன் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News