திருத்தணி ஜோதி நகரில் கால்வாய் நிரம்பி வீட்டிற்குள் புகுந்த அவலம்!

திருத்தணி ஜோதி நகர் பகுதியில் கால்வாய் நிரம்பி வீட்டிற்குள் புகுந்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2021-05-11 17:42 GMT

வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதை காணலாம்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டில் அடங்கிய ஜோதி நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சாலைகளில் அதிக அளவில் நீர் நிரம்பி, கழிவுநீர் கால்வாய் மூழ்கியது.

 ஜோதி நகரில் குடிசை வீடுகள் அமைந்துள்ள பகுதியில் கால்வாய் நீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. தற்போது கொரோனா பரவிவரும் நிலையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் காரணமாக வீட்டை விட்டு வெளியேவர முடியாமல் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


வீட்டை சுற்றி தேங்கியுள்ள கழிவுநீர்

கால்வாயை சீரமைக்க வேண்டும் என ஜோதி நகர் பகுதிவாழ் மக்கள், திருத்தணி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எனவே உடனடியாக இதனை சீர் செய்ய வேண்டும் எனவும் இப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News