திருத்தணி பிரதான சாலையில் தாறுமாறாக ஓடிய பேருந்து : பயணிகள் பீதி

திருத்தணி சாலையில் ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு நோய் ஏற்பட்டதால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. பேருந்தை சாதுரியமாக டிரைவர் நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.

Update: 2021-12-18 05:45 GMT

திருத்தணியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய பஸ்  மினி லாரி மீது மோதி நின்றது

திருப்பதியிலிருந்து சென்னை கோயம்பேடுக்கு தடம் எண். 201 குளிர்சாதன வசதி பேருந்து நேற்று காலை சென்றுக் கொண்டிருந்தது. திருத்தணி சென்னை பைபாஸ் சாலை சந்திப்பு பகுதியில் கொன்ற போது பேருந்து ஓட்டுநர் ஹேமநாதனுக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்து கட்டுப்பாடு இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியதால் பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் பீதியடைந்தனர்.

பிரதான சாலைக்கு அருகில் உயர் அழுத்த மின் கம்பம் மற்றும் பரப்பரப்பாக இயங்கும் சாலையில் தாறுமாறாக பேருந்து ஓடியதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். கடும் வலியிலும் பொருட்படுத்தாமல் சாதுர்யமாக செயல்பட்டு சாலையோரம் நின்றிருந்த சரக்கு ஆட்டோ மீது மோதி பேருந்தை நிறுத்தினார்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ஓட்டுனரை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச் சம்பவ குறித்து போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News