திருத்தணியில் என் மண் என் மக்கள் நிகழ்ச்சியை தொடங்கிய பாஜக தலைவர் அண்ணாமலை

190 வது தொகுதியான திருத்தணியில் என் மண் என் மக்கள் நிகழ்ச்சியை தொடங்க வந்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கட்சி தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.;

Update: 2024-02-08 12:45 GMT

திருத்தணியில் என் மண் என் மக்கள் யாத்திரையில் பாஜக தலைவர் அண்ணாமலை 

திராவிட அரசியலில் கலந்துள்ள ஜாதி அரசியல், குடும்ப அரசியல், ஊழியல், அடாவடித்தனம் ஆகிய 4 அழுக்குகள் அகற்றப்பட வேண்டும் . திருத்தணியில் நடைபெற்ற எண் மண், எண் மக்கள் யாத்திரையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எண் மண், எண் மக்கள் யாத்திரை தமிழ்நாட்டில் 189 தொகுதிகளில் மேற்கொண்டு 190வது தொகுதியாக திருத்தணியில் இன்று நடைபெற்றது.

அண்ணாமலையை வரவேற்கும் வகையில் அக் கட்சியினர் அரக்கோணம் சாலை, மா.பொ.சி சாலைப் பகுதிகளில் பேனர்கள், கொடி கம்பங்கள், வாழை தோரணங்கள் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் பொய்கால் குதியை, கேரள சண்டி மேளம், பம்பை உடுக்கை மேள தாளங்கள் உட்பட பல்வேறு வேடங்களில் கலைஞர்கள் அண்ணாமலைக்கு வரவேற்பு வழங்கப்பட்டது.

மதியம் 12 மணிக்கு திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு செல்லும் மலையடிவாரத்திலிருந்து தொடங்கிய அண்ணாமலை பாதயாத்திரை தொடங்கினார். அவருக்கு பா.ஜ.க வினர் முருகன் கோயிலில் பூஜைகள் செய்யப்பட்ட வெள்ளி வேல் காணிக்கை வழங்கப்பட்டது. ஏராளமான பா.ஜ.கவினர் மத்தியில் அரக்கோணம் சாலை, பேருந்து நிலையம், மா.பொ.சி சாலையில் பாதயாத்திரை நடைபெற்றது.அப்போது சாலைக்கு இருபுறமும் பொதுமக்கள் கூடி நின்று மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரச்சார வாகனத்திலிருந்து அண்ணாமலை பேசுகையில். ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்ட எண் மண் என் மக்கள் யாத்திரை மக்கள் யாத்திரையாக மாறி பா.ஜ.க செல்வாக்கு வெகுவாக அதிகரித்து வருகின்றது. வரும் நடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராவதை எந்த தீய சக்திகளால் தடுக்க முடியாது இது உறுதி.

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் ஜாதி அரசியல், குடும்ப அரசியல், ஊழல், அடாவடி அரசியல் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றது. அந்த 4 அழுக்குகள் அகற்ற மக்கள் முன் வரவேண்டும். அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஜெகத்ரட்சகன் திமுகவை பொறுத்தவரை நிறைகுடம் மக்களுக்கு அவர் குறைகுடம், திமுக வின் ரிசர்வ் வங்கியாக செயல்படும் ஜெகத்ரட்சகன் மக்களுக்கு தேவைகள் அடிப்படை தேவைகள் நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை என்று குற்றம் சாட்டினார்.

Tags:    

Similar News