திருத்தணியில் பிச்சைக்காரரை தாக்கி பணம் கொள்ளை..!இதில் யார் பிச்சைக்காரர்..?
வழிப்பறி கொள்ளையர்கள் பிச்சைக்காரரை தாக்கி 5 ஆயிரம் பணம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணியில் காலை பயங்கரம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் இரண்டு பேர் பிச்சைக்காரரை தாக்கி பணத்தை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பு.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் பழைய தர்மராஜா கோயில் தெரு பகுதியில் பிச்சை எடுத்துவிட்டு கோயில் அருகில் உறங்கிக் கொண்டிருந்தவர் பலராமன். இவர் கடுமையான மது போதையில் இருந்ததால் இவரை இரண்டு வழிப் பறி கொள்ளையர்கள் பலராமன் மண்டையை உடைத்து பிச்சை எடுத்து சேமித்து வைத்திருந்த5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டு அந்த பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி குப்பம்மாள் என்பவர் வீட்டு வேலைக்கு சென்றவர் இவரையும் மண்டையை உடைத்து படுகாயம் ஏற்படுத்தி இவரிடம் இருந்த தங்க கம்மல் மற்றும் தங்க மூக்குத்தி ஆகியவற்றை பறித்துக் கொண்டு இவரிடம் இருந்து 2000 ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டு மூதாட்டி தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இந்த இரண்டு சம்பவத்தில் தொடர்புடைய வழிபறிக் கொள்ளையர்களை பிடிக்க அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு திருத்தணி போலீசார் இந்த இரண்டு வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் யார் என்று திருத்தணி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த குப்பம்மாள், மற்றும் பலராமன் ஆகிய இருவரும் மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருத்தணி பகுதியில் பிச்சைக்காரனையும் மூதாட்டியை தாக்கி பணம் நகை கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.