திருத்தணி கோயிலில் 3 வேளை அன்னதான திட்டம், துவக்கிவைத்த முதலமைச்சர்

திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் 3 வேளை தொடர் அன்னதான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

Update: 2021-09-16 11:05 GMT

திருத்தணி முருகன் கோயிலில் ௩ வேளை அன்னதான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி  மூலமாக தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ளது‌, ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்.

இந்த திருக்கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆந்திர மாநிலம், கர்நாடகா மாநிலம், மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

இவர்களுக்கு பசி போக்கும் வகையில் அன்னதானம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் நடைபெற்ற‌ சட்டமன்ற கூட்டத்தொடரில் தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் திருத்தணி முருகன் கோயிலில் அன்னதானம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் அதற்கான ஆயத்த பணிகளை முடித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு செய்திருந்தார்.

அதனையடுத்து திருத்தணி முருகன் கோவிலில் அன்னதானம் திட்டத்தை செயல்படுத்த இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக இன்று இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டமானது திருத்தணி சுப்ரமணிய சாமி திருக்கோவிலுக்கு தினந்தோறும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தை இன்று பொதுமக்களுக்கு அன்னதானம் திட்டத்தை பால்வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி‌ ஆகியோர் வழங்கி தொடக்கக்கல்வி வைத்தனர்.

குடும்பத்துடன் கோயிலுக்கு வந்தால் சாப்பிடுவதற்காக ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் நிலையில் தமிழக அரசு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த அறுசுவை உணவு வழங்கும் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்து அதே மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அரசுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

இன்றைய அன்னதானத்தில் வடை பாயசத்துடன் அறுசுவை உணவை அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி‌ தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர் பொறுப்பு, ரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News