திருத்தணி அருகே கஞ்சா கடத்திய 4 வாலிபர்கள் கைது
திருத்தணி அருகே கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி மற்றும் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திராவில் இருந்து திருத்தணிக்கு இருசக்கர வாகனத்தின் மூலம் கஞ்சா கடத்துவதாக திருத்தணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின்பேரில் ஆய்வாளர் ஏழுமலை தலைமையில் கொண்ட போலீசார் திருத்தணி அடுத்த வீரகநல்லூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது ஆந்திர மாநிலம் நகரி பகுதியிலிருந்து திருத்தணி நோக்கி இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 3 வாலிபர்களை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அவர்கள் கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. மேலும் அந்த நபர்களிடம் ஒரு நாட்டு துப்பாக்கியும் போலீசார் கைப்பற்றினர். மேலும் அவர்களை விசாரித்ததில், அரக்கோணம் கையுனூர் பகுதியை சேர்ந்த பிரசாந்த், பார்த்தசாரதி, திருத்தணி அருங்குளம் கண்டிகையை சேர்ந்த பவன்குமார் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்த 6 கிலோ கஞ்சா, நாட்டு துப்பாக்கி மற்றும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.