திருவள்ளூர் அருகே கள்ளக் காதல் விவகாரத்தில் இளைஞர் தற்கொலை

திருவள்ளூர் அருகே கள்ளக்காதலி விட்டு சென்றதால் மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-11-09 16:04 GMT

தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடலை போலீசார் தூக்கி சென்றனர்.

திருவள்ளூர் அருகே கள்ளக்காதலி விட்டு சென்றதால் உடலில் மின்சாரம் பாய்ச்சிக் கொண்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு அடுத்த ராமதண்டலம் கிராமத்தில் உள்ள ஏரியின் அருகே இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த தகவல் அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளைஞரின் உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த இளைஞர் காஞ்சிபுரம் மாவட்டம், பாக்குப்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் என்பதும் இவர் தனது கள்ளக்காதலியை அழைத்துக்கொண்டு ராமதண்டலம் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக வீடு இன்றி ஆங்காங்கே வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் வெங்கடேசனின் கள்ளக்காதலி கடந்த நான்கு நாட்களுக்கு முன்னால் அவரது முதல் கணவருடன் திரும்பிச் சென்றதால் மன உளைச்சலுக்கு ஆளான வெங்கடேசன் ராமதண்டலம் ஏரியின் அருகே அமைக்கப்பட்டிருந்த மின்விளக்கின் ஒயரை அறுத்து தனக்கு தானே மின்சாரத்தை பாய்ச்சிக் கொண்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த புல்லரம்பாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News