ஆரணி அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது
ஆரணி அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அடுத்த பனப்பாக்கம் பகுதியில் பெரியபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர் போலீசை கண்டதும் ஓட முற்பட்ட நிலையில் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
சோதனையில் அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்து தப்பி ஓட முயன்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் கும்மிடிப்பூண்டி காட்டுக் கொல்லி தெருவை சேர்ந்த சிவப்பதிகாரன் ( வயது 26).என்பதும் இவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து சிறுசிறு பொட்டலங்களாக மாற்றி பொதுமக்களுக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதனை அடுத்து குற்றவாளியை பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.