சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபர் போக்சோவில் கைது
திருவள்ளூர் அருகே 16 வயது சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்தனர்;
திருவள்ளூர் அருகே 16 வயது சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த குத்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியை அதே பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார் (25) என்பவர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சிறுமியின் வீட்டாருக்கு தெரிந்து சம்பந்தஅது மாக பல முறை சதீஷ்குமாரை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சதிஷ்குமார் சிறுமியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் மாணவி பயந்து அலறியடித்து கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சதீஷ்குமாரை பிடித்து அடித்து அறையில் வைத்து பூட்டி விட்டு வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வெள்ளவேடு போலீசார் சதிஷ்குமார் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.
அதன் பின்னர், சிறுமியின் உறவினர்கள் சதிஷ்குமார் குடும்பத்தினரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சதிஷின் அத்தை காயமடைந்து பூந்தமல்லி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தாக்குதல் நடத்திய சிறுமியின் உறவினர்கள் 13 பேர் மீதும் வெள்ளவேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.