திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் இளம் பெண் தர்ணா

கணவர் குடும்பத்தாரிடமிருந்து குழந்தையை மீட்டுத்தரக் கோரி மகளிர் காவல் நிலையத்தில் இளம் பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.;

Update: 2023-04-07 03:15 GMT

தர்ணாவில் ஈடுபட்ட பெண்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாகுலு பத்மஜா என்ற இளம் பெண்ணுக்கும், திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ஆசூரி தெருவைச் சேர்ந்த சுதர்சனம் என்பருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தைக்கு அசுத் என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் கணவர் சுதர்சனம் மற்றும் குழந்தை அசுத்துடன் 43 நாட்கள் மட்டுமே இருக்க தாய் நகுலா பத்மஜாவை அனுமதித்துள்ளனர். அதன் பின்னர் குழந்தைக்கு பால் கொடுக்கவோ, பராமரிக்கவோ அனுமதிக்காமல் குழந்தையைப் பிடுங்கிக் கொண்டு ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து,  குழந்தையை பார்க்கவும், பராமரிக்கவும் அனுமதிக்கும்படி பலமுறை கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினரிடம் கேட்டுக் கொண்டும் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  இதனால் குழந்தை அசுத்தை உடனடியாக தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சி பாஸ் கல்யாணிடம் தன் குழந்தையை மீட்டு தர மனு அளித்தார்.

திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகாரை மாற்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லோகேஷ்வரி,  குழந்தை அசுத்தை நாகுலு பத்மஜாவிடம் அனுப்பி வைக்காமல் கணவர் சுதர்சனத்திற்கு சாதகமாக செயல்படுவதாகவும், உடனடியாக குழந்தை அசுத்தை தாயான தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து மகளிர் காவல் நிலைய நுழைவாயிலில் அமர்ந்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து குடும்பத்தாரை வரவைத்து தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உறுதி அளித்ததன் பெயரில் இந்தப் பெண் போராட்டத்தை கைவிட்டார். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News