குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி..!

திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் எடுக்கப்பட்டது.

Update: 2024-06-13 03:00 GMT

திருவல்லோரில் நடந்த குழந்தை தொழிலாளர் எதிர்ப்புதின ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர்  தொடங்கிவைத்தார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர் அவர்கள் தலைமையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தைகள் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை ஒட்டி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதி மொழியினை அனைத்து அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 14 வயதிற்குட்பட்ட அனைவரும் கல்வி கற்பதை உறுதி செய்திடவும் அறிவார்ந்த இளைஞர் சமுதாயம் உருவாக்கிடவும் குழந்தை தொழிலாளர்கலே இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் ஜூன் 12-ஆம் தேதியினை குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.


இந்திய அரசியலமைப்பு விதிப்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமம் என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டோம் எனவும் அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும் குழந்தை தொழிலாளர்கள் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும் தமிழகத்தை குழந்தைகள் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமாற உறுதி கூறுகிறேன் எனவும் அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி செல்வராணி தொழிலாளர் நல உதவி ஆணையர் திருமதி நிஷாந்தினி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட ஆட்சியரின் மேலாளர் குற்றவியல் திரு செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவனம் ஹாண்ட் இன் ஹாண்ட் திருவள்ளூர் மாவட்டத்தின் திட்ட மேலாளர் மேலாளர் உதயகுமார் , சுரேஷ்குமார், லதா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News