பழங்குடியின காலனியில் மகளிர் தினவிழா

கும்மிடிப்பூண்டி அருகே பழங்குடியின காலனில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-03-09 06:45 GMT

தாதன்கண்டிகை கிராமம் பழங்குடியின காலனியில் மகளிர் தின விழாவையொட்டி அரிசி வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், நேமளூர் ஊராட்சியை சேர்ந்த தாதன்கண்டிகை கிராமம், பழங்குடியின காலனியில் மகளிர் தின விழா அன்னை தெரசா கல்வி, மருத்துவம், விளையாட்டு, சமுதாய அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றது. அறக்கட்டளையின் நிறுவன தலைவர் ஓய்வு பெற்ற ஊத்துக்கோட்டை தாசில்தார் செல்வி டாக்டர் எ.இளவரசி தலைமை வகித்தார். அறக்கட்டளையின் செயலாளர் அழிஞ்சிவாக்கம் எம்.ரகு, பொருளாளர் ஆர்.பிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்றத்தலைவர் கோவிந்தம்மாள் செல்வம், 11வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் கே.சிவா ஆகியோர் கலந்து கொண்டி மகளிர் தினத்தின் சிறப்புகள் குறித்து எடுத்துக்கூறினர்.

தொடர்ந்து கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடினர். இதன் பின்னர் இப்பகுதியில் வசித்து வரும் 45 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வீடு தேடி சென்று அறக்கட்டளையின் நிறுவன தலைவர் ஓய்வு பெற்ற ஊத்துக்கோட்டை தாசில்தார் செல்வி டாக்டர் எ.இளவரசி வழங்கினார். முன்னதாக அனைவரையும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் கென்னடி, வேலாயுதம், தினகரன், சிராஜ், மல்லிகா, நாகராணி, அனிதா, சத்தியா, ஹரிகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். முடிவில் நிஷாந்த், எம்ரோஸ், செல்வம், நவீன்குமார் ஆகியோர் நன்றி கூறினர்.

Tags:    

Similar News