கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில் ஆரணியில் மகளிர் தின விழா
அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில் ஆரணியில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்த ஆரணி அனிதா திருமண மண்டபத்தில் அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில் மார்ச் 8-ம் தேதியான இன்று உலக மகளிர் தின விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு,மகளிர் அணி தலைவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். பொருளாளர் கன்னியம்மா,துணைச் செயலாளர்கள் லட்சுமி, சௌந்தர்யா,அமைப்புச் செயலாளர்கள் சுலோச்சனா, தமிழ்ச்செல்வி,திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில மகளிர் மேம்பாட்டு திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் உஷாராணி, சுகந்திரவல்லி, டாக்டர் ராணி மல்லிகார்ஜுனன், வழக்கறிஞர் செல்வி, ஆரணி பேரூர் திமுக செயலாளர் பி.முத்து, பேரூராட்சி மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சதீஷ், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் சுகுமார், ஒன்றிய கவுன்சிலர் பாலகுமார் ராகுல் ஆகியோர் கலந்துகொண்டு மகளிர் தின விழாவின் சிறப்புகளை எடுத்துக் கூறினர்.
அகில இந்திய கட்டிட தொழிலாளர் மத்திய சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம்,பொருளாளர் பரமானந்தம்,இணைச் செயலாளர் ஆறுமுகம், இளைஞர் அணி தலைவர் கோபிநாத், துணைச் செயலாளர் குமார், கே.குணசேகர், கே.நாகராஜ்,முரசொலி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் கலந்து கொண்ட அனைத்து மகளிர்களுக்கும் பரிசு பொருள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.